முதல்ல டிவிட்ட ஒழுங்கா படி.. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. சூரியை ஓட்டும் சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சூரி பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்து அவரை பங்கமாய் கலாய்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

லைக்கா நிறுவனம்

லைக்கா நிறுவனம்

டான் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இணையவுள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தது.

எஸ்ஜே சூர்யா

எஸ்ஜே சூர்யா

அதன்படி, படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தது.

நடிகர் சூரி ஆன்போர்டு

நடிகர் சூரி ஆன்போர்டு

இதேபோல் நகைச்சுவை நடிகர் சூரியும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்கள் இருவரின் கூட்டணியிலும் செம ஹிட்டானது.

சூரி டிவிட்

இந்நிலையில் டான் படத்திலும் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் என்னுடைய டியர் buddy சிவகார்த்திகேயனுடன் ஸ்க்ரீனை ஷேர் செய்வதில் மகிழ்ச்சி.. உங்களை கேம்பஸில் பார்க்கிறேன் நண்பா என பதிவிட்டுள்ளார்.

அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்

சூரியின் இந்த பதிவு அவருடைய உச்சரிப்பு மாடலிலேயே உள்ளது. சூரியின் இந்த டிவிட்டுக்கு பதில் கூறியுள்ள சிவகார்த்திகேயன், Buddy முதல்ல டிவிட்ட ஒழுங்கா படி.. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என கூறி கலாய்த்துள்ளார்.

கோர்த்து விட்டேனா?

கோர்த்து விட்டேனா?

அவர்களின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. சுமார் 19 ஆயிரம் பேர் இந்த பதிவை லைக் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்சன் திலீப்குமாரிடம் தளபதி 65 அப்டேட் கேட்டு கோர்த்துவிட்டேனா என்று விளையாடினார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X