சிவகார்த்திகேயனிடம் கோலிவுட்டை கொடுத்தாரா விஜய்?.. சமூக வலைதளங்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில், படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து மாஸ் காட்டி வருகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு துவங்கிய நிலையில் அங்கு சென்று தமிழக ரசிகர்கள் கோட் படத்தை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர்.

கோட் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள சிவகார்த்திகேயனும் கோவையில் உள்ள பிரபல திரையரங்கில் சென்று கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். இதனிடையே கோட் படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவரது கேரக்டரையொட்டி ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

vijay goat movie sivakarthikeyan

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கோட் படம். இந்த படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விஜய் விலகவுள்ளதாக முன்னதாக அறிவித்துள்ள நிலையில் கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை கோட் படம் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் 4 மணிக்கே துவங்கிய நிலையில் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று கோட் படத்தை பார்த்து தமிழக ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.

கோட் படம்: கோட் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தை வேற லெவலில் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைவிட சிறந்த ஃபேர்வெல் பார்ட்டியை வெங்கட் பிரபு விஜய்க்கு கொடுத்து விட முடியாது என்றும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்களும் படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் மட்டுமில்லாமல் மூன்றாவதாகவும் ஒரு கேரக்டரில் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

சிவகார்த்திகேயன் கேமியோ: கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், திரிஷா கேமியோ கேரக்டர்களும் மிகப்பெரிய உற்சாகத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. படத்தில் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன. மேலும் இனி மேல் வில்லனை அவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று விஜய் கூறுவதாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. இதற்கு இனிமேல் தான் பார்த்துக் கொள்வதாக சிவகார்த்திகேயன் பதில் அளிப்பதாகவும் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. இந்நிலையில் இந்த காட்சிகளை ரசிகர்கள் வேறு லெவலில் மாற்றி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கோலிவுட்டை கொடுக்கும் விஜய்?: தான் சினிமாவில் இருந்து விலக உள்ள நிலையில் தன்னிடம் உள்ள துப்பாக்கியான கோலிவுட்டை சிவகார்த்திகேயனிடம் விஜய் அளிப்பதாகவும் இனிமேல் அவர் கோலிவுட்டை பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறுவதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பதிவுகளை இணைத்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் சிவகார்த்திகேயன் நீங்கள் வேறு வேலையாக (அரசியல்) செல்வதால் இனிமேல் வில்லனை தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் விஜய் வசம் இருந்த கோலிவுட் இனிமேல் சிவகார்த்திகேயன் வசம் வரும் என்றும் அவர் அதை சிறப்பாக கையாளுவார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

vijay goat movie sivakarthikeyan

சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி: இதனிடையே, முன்னதாக விஜய் சொன்னது போலவே, குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் தன்னுடைய ஃபேன்ஸ்களாக இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் காணப்படுகிறது. மேலும் ஒரு அவார்ட் ஃபங்ஷன் நிகழ்ச்சியில் விஜய் படிக்கட்டில் இருந்து கீழே இறங்குவதாகவும் சிவகார்த்திகேயன் மேலே ஏறுவதாகவும் அமைந்திருந்தது. அந்த வீடியோவையும் தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மொத்தத்தில் விஜய் மற்றும் கோட் படங்கள் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார்.

vijay goat movie sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X