அஜித்குமாரைச் சீண்டிய சிவகார்த்திகேயன்.. கார் ரேஸ் குறித்து இப்படியா பேசுவது? தீயாக பரவும் வீடியோ!
சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக உள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் அஜித் ரொம்பவுமே வித்தியாசமான நடிகர். ரசிகர்கள் மன்றத்தைக் கலைத்தது, ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் பெயர்களை வேண்டாம் எனக் கூறிவிட்டு, தன்னை அஜித்குமார் என்றே அழையுங்கள் எனக் கூறியது வரை மொத்தமாகவே வித்தியாசமான நடிகராக உள்ளார். இப்படியான நிலையில் நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் கலந்து கொள்ள துபாய்க்குச் சென்றுள்ளார். இப்படியான நிலையில் அஜித்குமாரின் கார் ரேஸ் போட்டி குறித்து சிவகார்த்திகேயன் கலாய்த்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் அஜித்குமார் நடிப்பது மட்டும் இல்லாமல் கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக நாட்டம் கொண்டவர். இப்படியான நிலையில் இந்த ஆண்டு துபாயில் நடந்து வரும் ஜி.டி. 3 ரக, 24 மணி நேரம் பந்தயம் நடைபெறக்கூடிய கார் பந்தையத்தில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக தனது பெயரில் தானே ஒரு அணியை உருவாக்கி இந்தியாவில் இருந்து கலந்து கொண்டுள்ளார். இந்த அணியின் உரிமையாளர் கேப்டன் என அஜித்குமார் முக்கிய பொறுப்பும் வகிக்கின்றார். மேலும் அஜித்குமார் ரேஸிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த அணியில், அவருடன் சேர்த்து மொத்தம் 4 வீரர்கள் உள்ளனர்.

24 மணி நேர போட்டியில் ஒவ்வொருவரும் தலா 6 மணி நேரம் கார் ஓட்டவேண்டி இருக்கும். ஏற்கனவே நடைபெற்ற தகுதிச் சுற்றில் அஜித்குமாரின் அணி 7வது இடத்தினைப் பிடித்தது. இப்படியான நிலையில் இணையத்தில் அஜித்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தார். அதேபோல் பலகுரல் வித்தகராகவும் இருந்தார். இப்படியான நிலையில் அவர் அஜித்குமார் குறித்தும் அஜித்குமாரின் கார் ரேஸ் பங்கேற்பு குறித்தும் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் சிவகார்த்திகேயன் அஜித்தின் ரேஸ் பங்கேற்பு குறித்து, மிகவும் மோசமாக கிண்டல் அடித்து பேசியுள்ளார்.
வீடியோ: அதாவது, பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு அஜித் பேசுவதைப்போல சிவகார்த்திகேயன் பேசுகின்றார். ரேஸில் அஜித் கலந்து கொண்டபோது, மொத்தம் 11 பேர் கலந்து கொண்டதாகவும், அந்த போட்டியிலேயே அவர் 13வது நபராகத்தான் வந்தார் எனவும் பேசியுள்ளார், மேலும் ஏன் 13வதாக வந்தீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு பின்னாடி ஒரு பேட்ரோல் வண்டி வந்தது, அதற்கு தொந்தரவு தரக்கூடாது என அதற்கு பின்னால் வந்தேன் என அஜித் பேசுவதைப்போல சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
வாழ்த்து: தற்போது இந்த வீடியோவை இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் அஜித்குமார் மற்றும் அவரது அணி கார் ரேஸில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய அஜித்குமார் சார். துபாயில் நீங்கள் கலந்து கொள்ளும் 24 மணி நேர கார் பந்தயத்திற்காக வாழ்த்துகள். உங்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அதற்காக உங்களது அர்பணிப்பும் என்னைப் போன்ற பலருக்கு ஊக்கமாக உள்ளது. இந்த கார் பந்தயத்திலும் நீங்கள் மாபெரும் வெற்றியைப் பெற எனது வாழ்த்துகள் சார் என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











