அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன அடுத்த பிரபலம்.. ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேட்டி!
சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் கடந்த 24ம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்கில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். சமூக வலைதளங்கள் மூலமும் இரங்கல் தெரிவித்தனர்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஜித் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

அஜித் தந்தை மரணம்
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில் கடந்த 24ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்த நேரத்தில் வலிமையுடன் இருக்க அஜித்திற்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

முதலமைச்சர் இரங்கல்
அஜித் தந்தையின் மரணத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்திருந்தார். இதேபோல எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார். அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட சில அரசியல்கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

நடிகர் விஜய் நேரில் ஆறுதல்
லியோ படத்தின் காஷ்மீர் சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருந்த நடிகர் விஜய்யும் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். சுமார் 15 நிமிடங்கள் அஜித்துடன் இருந்த விஜய், பின்பு புறப்பட்டு சென்றார். இதனிடையே நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் நேற்றைய தினம் அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் காரில் அஜித் வீட்டிற்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சிவகார்த்திகேயன் ஆறுதல்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை மறைவிற்கு தன்னுடைய ஆறுதலை அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். மாவீரன் படத்தின் சூட்டிங்கில் கமிட்டான சிவகார்த்திகேயன், சூட்டிங்கை தற்போது நிறைவு செய்துள்ளார். சூட்டிங்கை நிறைவு செய்த கையோடு அஜித் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன், அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அஜித் பட டயலாக்கை பேசிய சிவகார்த்திகேயன்
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன், தன்னுடைய நடிப்பில் ரஜினியின் சாயல் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மாவீரன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், மாவீரன் மற்றும் அயலான் என அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கூட இருக்கறவன நாம பாத்துக்கிட்டா, மேல இருக்கறவன் நம்மள பார்த்துப்பான் என்று அஜித்தின் வீரம் பட டயலாக்கையும் மேற்கோள் காட்டி பேசினார்.


Click it and Unblock the Notifications











