சிவகார்த்திகேயன் திருத்தணி கோயிலில் சாமி தரிசனம்.. ஸ்டூடண்ட் லுக்கில் கலக்கலா இருக்காரே!
திருத்தணி: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக சிவகார்த்திகேயன் -ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் 300 கோடிகளை தாண்டி வசூலித்த நிலையில் தற்போது ஓடிடியிலும் மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.
அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து சுதா கொங்கரா, சிபி சக்கரவர்த்தி இயக்கங்களிலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது அமரன். இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 300க்கும் அதிகமான கோடி வசூலை பெற்றுள்ளது. இந்த படம் தற்போது ஓடிடியிலும் ரிலீசான சூழலில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
புறநானூறு பட சூட்டிங்: இந்த படத்தின் சூட்டிங் வரும் 20ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் முன்னதாகவே நாளை மறுதினம் முதல் சூட்டிங்கை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் டெஸ்ட் சூட்டை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது நேரடியாக படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளனர். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள நிலையில் இதற்காக க்ளீன் ஷேவ் லுக்கிற்கு அவர் மாறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைக்களங்களில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், ரசிகர்களின் ஃபேவரிட் நாயகனாக மாஸ் காட்டி வருகிறார்.

திருத்தணி கோயிலில் சாமி தரிசனம்: ஏஆர் முருகதாசுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த படத்தின் டைட்டிலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்துள்ளார். புறநானூறு படத்தின் சூட்டிங் இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ள நிலையில் அதையொட்டி தற்போது சிவகார்த்திகேயன் திருத்தணி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதன்போது கடுமையான மழையிலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுததுக் கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. இந்த படத்தில் அவருக்கு அவருடன் இணைந்து ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

வில்லனாக ஜெயம்ரவி: படத்தில் ஜெயம் ரவி வில்லனாக களமிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் அமைந்துள்ளது. அமரன் படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் அவரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படத்தை சிவகார்த்திகேயனை தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தையும் அவரே தயாரிப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











