பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிக்கனும்.. திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி மிகச்சிறப்பான வெற்றியை அவரது கேரியரில் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் இன்றைய தினம் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் செல்ல தான் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமரன் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயராம், அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.

sivakarthikeyan purananooru movie thiruchendur

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த தீபாவளியையொட்டி அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்திற்கு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் 1965 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் சாமி தரிசனம்: இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இதனிடையே, தற்போது திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்துள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ள அவர் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்ல தான் விருப்பத்துடன் உள்ளதாகவும் அடுத்தடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறை திருச்செந்தூர் வரும்போதெல்லாம் பாசிட்டிவ்வாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். அமரன் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லவே தான் இங்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிக்கனும்: இதனிடையே அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோயிலில் தான் பதிலளிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் தான் அனைவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

கடவுளிடம் வேண்டுதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கும் முழு தைரியம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புவோம் என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன், கடவுளிடமும் தான் அதையே வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாகவே திருச்செந்தூர் கோயிலுக்கு செல்ல தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் வெள்ளம் உள்ளிட்டவற்றால் தன்னுடைய பயணம் தள்ளிப் போனதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X