விஜய்யின் கோட் படத்தை திரையரங்கில் சென்று பார்த்த சிவகார்த்திகேயன்.. சும்மா புயல் போல வர்றாரே!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படம் காலை 4 மணி ஷோவாக ரிலீஸான நிலையில் தமிழக ரசிகர்களும் அங்கு சென்று இந்த படத்தை என்ஜாய் செய்ததை காண முடிந்தது.

படம் பார்த்த ரசிகர்கள் மிகப் பெரிய உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். படம் விஜய்க்கு மிகப்பெரிய ஃபேர்வெல் பார்ட்டியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்துடன் சேர்ந்து பார்க்கும் போது யுவன் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

vijay goat movie sivakarthikeyan

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன. மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் கேரக்டர் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக அவரது கேரக்டர் குறித்த பல தகவல்கள் வெளியான நிலையில் அவரது ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாட சில மாதங்களாகவே காத்திருந்தனர்.

கோட் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன்: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் கோட் படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோட் படத்தை திரையரங்கில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய தினம் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். கோவை பிராட்வே திரையரங்கில் அவர் கோட் படத்தை பார்த்துள்ளார். அவர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ரசிகர்களும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

vijay goat movie sivakarthikeyan

ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன்: தொடர்ந்து கோட் படம், நடிகர் விஜய் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் சிவகார்த்திகேயனும் தற்போது அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். விஜய் தற்போது வெளியாகியுள்ள கோட் படம் மற்றும் தளபதி 69 படங்களுடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இடத்தை கோலிவுட்டில் அடுத்ததாக யார் பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் அதற்கான விடை கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் -சிவகார்த்திகேயன் கூட்டணி: விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் மாஸாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக அவரது நடிப்பில் அமரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X