மீண்டும் அப்பாவாக போகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? டவுட்டை கிளப்பும் மனைவி ஆர்த்தியின் போட்டோ!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.
Recommended Video
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
நடிகர் மட்டுமின்றி, பாடகர். பாடலாசிரியர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

மீண்டும் அப்பா?
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் அப்பாவாக போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

ரசிகர்கள் சந்தேகம்
ஆர்த்தியின் வயிறு சற்று மேடு தட்டி காணப்படுவதையும் அவர் ஷாலை வைத்து தனது வயிற்றை மறைத்தப்படி நடந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. இதனை பார்த்தே ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

மகளுக்கு 7 வயசு
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகள் உள்ளார். ஆராதனாவுக்கு தற்போது 7 வயதாகும் நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாக உள்ளாரா என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஜூனியர் வர போகிறாரா?
ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர்தான் பதிலளிக்க வேண்டும். இருப்பினும் ரசிகர்கள் சிவ கார்த்திகேயன் மீண்டும் அப்பாவாக போகிறாரா.. ஜூனியர் வர போகிறாரா என கேட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











