அமரன் படத்தின் கமாண்டிங் ஆபீசர்.. உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பல தளங்களில் பயணித்து வரும் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி அமரன் படம் ரிலீசானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியிருந்தார். நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து கடந்த ஒரு வாரத்தில் மிகப்பெரிய வசூலையும் குவித்து வருகிறது. படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal haasan sivakarthikeyan amaran movie

அமரன் படம்: சிவகார்த்திகேயன், சாய்பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் ஒரு வாரத்தை கடந்து திரையரங்குகளில் மிகச் சிறப்பாக ஓடி வருகிறது. இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ள நிலையில், படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அமரன் படம் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை சென்னையிலும் தொடர்ந்து ஹைதராபாத்தில் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்: அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அவர் சல்மான்கான் படத்தின் சூட்டிங்கில் பிசியாகி உள்ளதால் தற்போது இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து அமரன் படத்தின் ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வந்த சிவகார்த்திகேயன், தற்போது சக்சஸ் மீட்களில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் ஏஆர் முருகதாஸ் உடனான படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமரன் படத்தின் தயாரிப்பாளரான உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை ஒட்டி இன்றைய தினம் சிவகார்த்திகேயன் அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

கமாண்டிங் ஆபீசர்: அமரன் படத்தின் கமாண்டிங் ஆபீசர் உலகநாயகன் கமல்ஹாசன்தான் என்று சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்ததுடன், அமரன் போன்ற சிறப்பான படத்தை கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார். ராணுவ கதைக்களத்தில் உருவாகியுள்ள அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வளர்ச்சி அடுத்தடுத்து சிறப்பாக காட்டப்படுகிறது. ராணுவத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரியல் கமாண்டர் உலகநாயகன் என்று சிவகார்த்திகேயன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: இன்றைய தினம் கமல்ஹாசனின் பிறந்த நாளை ஒட்டி அவரது அடுத்த படமான தக் லைஃப் படத்தின் ரிலீஸ் டீசரும் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதியில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் அவரது வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளார். தொடர்ந்து திரிஷா, அபிராமி வையாபுரி, நாசர் என நடிகர்கள் பலரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மணிரத்னத்துடன் இணைந்து கமல்ஹாசனும் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X