ஆள் செமயா இருக்கீங்க.. சங்கத்துக்கு வேற ஆள்தான் பாக்கணும்.. சூரிக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன எஸ்கே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பரும் நடிகருமான சூரிக்கு அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரையை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சூரி. காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து பல படங்களில் அன் கிரெடிட்டட் ரோலில் நடித்துள்ளார்.
சில படங்களில் ஹீரோவுக்கு பின்னணியிலும் கூட்டத்தோடு கூட்டமாகவும் ஆளே தெரியாத அளவுக்கு நடித்துள்ளார்.

கள்ள ஆட்டம் ஆடுற - எல்லா கோட்டையும் அழி
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சூரி. இப்படத்தில் சுப்பிரமணி கதாப்பாத்திரத்தில் நடித்த சூரி பரோட்டா காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானார். இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் ஏமாற்ற முயற்சிக்கும் கடைக்காரரிடம் எல்லா கோட்டையும் அழி, நான் முதல்லேருந்து விளையாடலாம் என்று கூறி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் சூரி.

வெறும் சூரி - பரோட்டா சூரி
இந்த படத்திற்கு முன்பு வரை வெறும் சூரியாக இருந்த அவர், பரோட்டோ சூரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சூரி.
தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் சூரி.

பக்கா கெமிஸ்ட்ரி - நல்ல நண்பர்கள்
நடிகர் சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்துள்ளார். சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் படங்களில் பக்காவாக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும். இருவரும் நடிகர்கள் என்பதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகிறார்கள்.

சினிமாவை தாண்டியும் நல்ல பாண்ட்
சமூக வலைதளங்களிலும் இருவரும் கலாய்த்து கொள்வார்கள். அதிலும் சிவகார்த்திகேயன் படத்தில் ஓட்டுவதை போலவே ரியல் லைஃப்பிலும் சூரியை வச்சு செய்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியின் டிவீட்டில் இருந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை வைத்து கலாய்த்து தள்ளினார் சிவகார்த்திகேயன். இருவருக்கும் இடையில் சினிமாவை தாண்டியும் நல்ல பாண்ட் உள்ளது.

சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
இந்நிலையில் நடிகர் சூரி இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் சூரியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கணும்
இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் சூரியின் கலக்கல் போஸ் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவுடன் எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கோடி.. ஆள் செமயா இருக்கீங்க... இனி ஃபுல்லா ஹீரோதான்.. நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கணும் போல.. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. ஆல்வேஸ் லவ் யூ அண்ணா.. என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து
சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு உங்கள் வாழ்த்துக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் சூரி. சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் நாங்கள் வேண்டுமானால் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு வரலாமா என கேட்டு வருகின்றனர். இதனை பார்த்த பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











