நள்ளிரவில் ரிலீஸான சூரரைப்போற்று.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. சூர்யா பதில பாருங்க!
சென்னை: சூரரைப்போற்று திரைப்படம் இன்று நள்ளிரவு ரிலீஸாக உள்ள நிலையில் நடிகர் சூர்யாவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்தப் படத்தில் அபர்ணா பாலாமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

படக்குழு முடிவு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. கடந்த 30 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு
ஆனால் படத்திற்கு தேவையான சில சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமேஸான் பிரைம் தளத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸாகிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றிரவு படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன்
திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் நடிகர் சூர்யாவுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமேஸிங் எக்ஸ்பீரியன்ஸ்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சூரரைப்போற்று திரைப்படம் பெரும் வெற்றி பெற சூர்யா சார், சுதா கொங்கரா மேடம், ஜிவி பிரகாஷ் மற்றும் ஒட்டு மொத்த சூரரைப்போற்று டீமுக்கும் வாழ்த்துகள். டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் ரொம்ப பிடித்தது.. நிச்சயமாக இந்த படம் நிச்சயமாக அமேஸிங் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சூர்யா ரிப்ளை
நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த பதிவை பார்த்த நடிகர் சூர்யா, வெரி கைன்ட் ஆஃப் யூ சிவா என பதிவிட்டுள்ளார். சூர்யாவின் இந்த பதிவை இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











