கண்ணாலே கதைபேசும் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி.. அமரன் ஃபர்ஸ்ட் பாடல்.. ஜிவி பிரகாஷோட 700வது பாடலா!

நடிகர் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் அமரன். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இந்தப் படத்தில் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு மையமாக கொள்ளப்பட்டுள்ளது.

படத்தில் முகுந்தன் என்ற ராணுவ வீரரின் பயோபிக் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் முதல் முறையாக இந்தப் படத்தில் ராணுவ வீரராக களமிறங்கியுள்ளார். அவரது கெட்டப் உள்ளிட்டவை இந்தப் படத்தில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அதிகப்படியான சூட்டிங் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது.

sivakarthikeyan amaran movie first single

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் -ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகியுள்ளது அமரன் படம். இந்தப் படத்தில் முகுந்தன் என்ற ராணுவ வீரரின் பயோபிக் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ள நிலையில், படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை சாய் பல்லவி. இந்தப் படம் இந்த மாதம் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் நாயகி சாய் பல்லவியின் கேரக்டரை அறிமுகம் செய்தனர். படத்தில் இந்து என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

அமரன் படம்: இந்த வீடியோவில் ராணுவ வீரர் முகுந்தனின் மனைவி இந்துவையும் காட்சிப்படுத்தியிருந்தது படக்குழு. இந்நிலையில், இந்த வீடியோவில் புத்தம் புது மலராக சாய் பல்லவி காணப்பட்டார். இந்த வீடியோவில் சிவகார்த்திகேயனின் கெட்டப்பும் வெளியான நிலையில், இதையடுத்து இன்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஹே மின்னலே என்ற இந்தப் பாடல் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அமரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்: கல்லூரியில் முதல் நாள் வரும் சாய் பல்லவியின் வருகை இந்தப் பாடலில் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஸ்டேஜில் அவரது பிரசென்சும் மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளது. அடுத்தது சிவகார்த்திகேயன் -சாய் பல்லவியின் காதல் காட்சிகளும் இந்தப் பாடலில் சிறப்பாக காணப்படுகிறது. ஜிவி பிரகாஷ் எப்போதும் தன்னுடைய படங்களில் பாடல்களில் ஆத்மார்த்தமான இசையை பதிவு செய்வார். உணர்வுகளை சங்கமிக்க விடுவார். இந்தப் படத்திலும் அந்த ஆத்மார்த்த இசையை எதிர்பார்க்கலாம் என்பதற்கு இந்த ஹே மின்னலே பாடல் உதாரணமாக காணப்படுகிறது. இந்தப் பாடலின் மற்றொரு ஸ்பெஷல் இது ஜிவி பிரகாஷின் 700வது பாடல் என்பதுதான்.

அமரன் பட பிரமோஷன்கள்: அமரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், இந்த படத்தின் பிரமோஷன்களை மிகவும் சிறப்பாக மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை தொடர்ந்து தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட பல விஷயங்களை அதன் அப்டேட்களை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரருக்கே உரிய மிடுக்குடன் காணப்படும் நிலையில், படத்தில் அவரது காதல் போர்ஷன்கள் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X