ஹார்ட் ஆஃப் அமரன்.. நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் அமரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது அமரன் படம். நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளது. தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளது.

sivakarthikeyan amaran movie tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது டிரான்ஸ்பர்மேஷன் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று தன்னுடைய முத்திரையை பதித்த இவர், மெரினா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவரது இயல்புக்கு தக்க காமெடி படங்களில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தி மாஸ் காட்டினார்.

அமரன் படம்: இந்த படங்கள் இவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில், அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். ஆக்ஷன் ஹீரோவாக இருந்த போதிலும் காமெடியையும் தன்னுடைய பக்கவாட்டில் வைத்துக் கொண்டு வரும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் முதல் முறையாக கமல்ஹாசன் தயாரிப்பில் இணைந்துள்ள அமரன் படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ளது.

அமரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: நீண்ட நாட்களாக உருவாகிவந்த இந்தப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடப்பட குழுவினர் தயாராகியுள்ளனர். இதையொட்டி, நாளைய தினம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்து இரு தினங்களுக்கு முன்னதாகவே தன்னுடைய பதிவில் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதாக ஹார்ட் ஆஃப் அமரன் என்ற மேற்கோளுடன் படக்குழு அறிவித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் மேஜிக்: தன்னுடைய பாடல்களில் எப்போதுமே ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்யும் வித்தையை செய்துவருபவர் ஜிவி பிரகாஷ்குமார். இதனிடையே, ராணுவ வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ள அமரன் படத்தில் தன்னுடைய மேஜிக்கை எப்படி வெளிப்படுத்துவார் என்பதை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். கண்டிப்பாக அவர்களின் எதிர்பார்ப்பை ஜிவி பிரகாஷ் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் சாய் பல்லவி, கடற்கரையில் வானத்தை பார்த்தபடி ஏக்கத்துடன் இருப்பதாக காணப்படுகிறது. இந்த பர்ஸ்ட் சிங்கிள் காதல் பாடலாக அமைந்துள்ளதாகவும் முன்னதாகவே கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X