Actor Kavin: சிவகார்த்திகேயனுக்கு கவினின் மனமார்ந்த.. அட இதுதான் விஷயமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பிளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் என இந்த தீபாவளிக்கு அடுத்தடுத்து நான்கு படங்கள் ரிலீசாகவுள்ளன. இதில் அமரன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கூட்டணி மிகவும் பலமாக அமைந்துள்ள நிலையில், அமரன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன்கள் கடந்த சில வாரங்களாகவே நடந்து வருகிறது. நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டு அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து படத்தின் ரிலீசுக்கான முன்னோட்டமாகவும் அமைந்துள்ளது.

அமரன் படம்: இந்த தீபாவளி ரேஸில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பிளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் தமிழில் நேரடியாக ரிலீசாக உள்ளன. இதையடுத்து நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் தமிழில் இந்த தீபாவளி பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. இந்த தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களை ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் பார்க்கும் படியாக இந்த படங்கள் ரிலீஸாக உள்ளன. தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் என அடுத்தடுத்த படங்களின் ப்ரோமோஷன்களை மிகச் சிறப்பாக பார்க்க முடிகிறது.
அமரன் பட ட்ரெயிலர்: குறிப்பாக இராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கையை கூறும் அமரன் படம் மிக அதிகமான கவனத்தை பெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் இந்த தீபாவளி பந்தயத்தில் இந்த படம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான வரவேற்பையும் பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் பாடல்கள் ஜிவி பிரகாஷ் இசையில் முன்னதாக வெளியாகி உள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு கவின் வாழ்த்து: இந்த ட்ரெய்லர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து மிகச் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் நேற்றைய தினம் ரிலீசான ட்ரெய்லரை சிவகார்த்திகேயனும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த ட்ரெயிலருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அடுத்தடுத்த வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் பிளடி பெக்கர் படத்தின் நாயகன் நடிகர் கவினும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவரது ப்ளடி பெக்கர் படத்துடன் வெளியாகும் அமரன் படத்தை போட்டியாக நினைக்காமல் ஆரோக்கியமான போட்டிக்கு கவின் இதன் மூலம் வழி வகுத்துள்ளார். அவரது இந்த வாழ்த்து அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கவினின் ப்ளடி பெக்கர் படம்: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது ப்ளடி பெக்கர் படம். இந்தப் படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். பிச்சைக்காரர் ஒருவனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் கவின் நடித்துள்ளார். ஸ்டார் படத்தையடுத்து அவரது நடிப்பில் வெளியாகவுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தில் காமெடி அதிகமாக இருக்கும் என்ற போதிலும் முழுமையான காமெடி படம் இல்லை என்று இயக்குநர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். படத்தில் கவினுக்கு ஜோடி இல்லை என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











