Sivakarthikeyan: அயலான் 2 ப்ரீ புரொடக்ஷன் பணிகள் துவக்கம்.. VFXக்கு மட்டும் இவ்வளவு கோடி ஒதுக்கீடா

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 12ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசானது அயலான் படம். கடந்த 5 ஆண்டுகளாக உருவாகிவந்த இந்தப் படத்தின் VFX காட்சிகள் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் இந்தப் படம் வெளியாவதில் அவரும் முக்கியமான பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரமான நிதி நெருக்கடியில் அயலான் படம் சிக்கி தவித்தபோது, சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தன்னுடைய சம்பளத்தை காட்டிலும் படம் வெளியாவது தனக்கு முக்கியமாக பட்டது என்றும் அதனால்தான் சம்பளம் குறித்தெல்லாம் யோசிக்காமல் படம் வெளியாக தான் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் முன்னதாக பேட்டியொன்றில் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இந்தப் படத்திற்கு அதிகமான பிரமோஷன்கள் செய்யப்பட்ட நிலையில் இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து அடுத்தடுத்த பிரமோஷன்களில் சிவகார்த்திகேயன் சிறப்பாக ஈடுபட்டார்.

Actor Sivakarthikeyans Ayalaan 2 movie pre production work starts it seems

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் பேன்டசி கதைக்களத்தில் கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. வசூலிலும் சிறப்பாக அமைந்தது. முன்னதாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகி சொதப்பிய நிலையில், மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அவரது முந்தைய படங்களான டாக்டர், டான் போன்று இந்தப் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் 100 கோடி கிளப்பில் இணையவில்லை என்றபோதிலும் ஏறக்குறைய அந்த வசூலை நெருங்கி தயாரிப்பு தரப்பிற்கு சிறப்பாக அமைந்தது.

எஸ்கே 21 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 10 சதவிகித சூட்டிங் மட்டுமே பாக்கியுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாக உருவாகிவந்த அவரது அயலான் படம், கடந்த 12ம் தேதி பொங்கலையொட்டி ரிலீசானது. ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் இந்தப் படம் வெளியானது.

Actor Sivakarthikeyans Ayalaan 2 movie pre production work starts it seems

ரசிகர்களை கவர்ந்த அயலான் படம்: இந்தப் படம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. படம் கடந்த இரு வாரங்களில் சிறப்பான வசூல்மழையை பொழிந்துள்ளது. இதனால் தயாரிப்புத் தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று முன்னதாக இயக்குநர் ரவிக்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஒப்பந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் VFX வேலைகள் முன்னதாகவே துவங்கவுள்ளது.

அயலான் 2 படப் பணிகள் துவக்கம்: இதற்காக முன்னதாகவே 50 கோடி ரூபாயை தயாரிப்பு தரப்பு ஒதுக்கியுள்ளது. இந்த முறையும் சிறப்பான விஷுவல்களை படத்தில் காணலாம் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய ட்ரெண்டிற்கு தகுந்தாற்போல இந்தப் படத்தின் கதை மற்றும் ஸ்கிரிப்ட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உருவாகிய போதிலும் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்து பொங்கல் ரேஸில் சிறப்பான இடத்தை பிடித்தது அயலான். இதேபோல அடுத்த பாகமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ரவிக்குமாருடன் இணைவது குறித்து முன்னதாகவே சிவகார்த்திகேயனும் உற்சாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X