Sivakarthikeyan: 4 நாட்களில் 50 கோடி.. சிறப்பான வசூலில் சிவகார்த்திகேயனின் அயலான் படம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் கடந்த 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. அடுத்தடுத்து பொங்கல் விடுமுறையால் படத்தின் வசூல் களைகட்டி வருகிறது. மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான இந்தப் படமும் பேன்டசி கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரகுல் பிரீத் சிங் ஜோடியாகியுள்ள நிலையில் யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் உருவாக 5 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. இன்று நேற்று நாளை படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைத்து தரப்பினரையும் அவர் கவர்ந்துள்ளார். கடந்த 4 நாட்களில் அதிகப்படியான வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது. படத்தில் ஏலியனை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிஜி வேலைகளை மிகவும் சிறப்பாக படக்குழுவினர் செய்துள்ளனர். அதிகமான மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகியுள்ள அயலான் படம் தொடர்ந்து வசூல்சாதனை படைத்து வருகிறது.

Actor Sivakarthikeyans Ayalaan movie collects worldwide 50 crores in just 4 days

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் மாவீரன் படம் வெளியாகி மாஸ் காட்டியது. முன்னதாக வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், மாவீரன் பேன்டசி கதைக்களத்தில் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்கீழ் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாக உருவாகிவந்த சயின்ஸ் பிக்ஷன் படமான அயலான் படம் பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ளது.

இயக்குநர் ரவிக்குமார்: சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு மற்றும் கருணாகரன் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் படம் உருவாகிவந்த நிலையில், ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளுக்கிடையில் தற்போது வெளியாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அயலான் படம் அந்த நம்பிக்கையும் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகியுள்ளது. ஏலியனை மையமாக கொண்டு, கமர்ஷியல் அம்சங்களையும் உள்ளே நுழைத்து கதைக்களத்தை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.

Actor Sivakarthikeyans Ayalaan movie collects worldwide 50 crores in just 4 days

பொங்கல் ட்ரீட்: இந்தப் படத்திலும் பக்கத்து வீட்டு பையன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் கமர்ஷியல் அம்சங்களை நுழைத்து பார்வையாளர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்துள்ளார் ரவிக்குமார். முதல் நாளிலிருந்தே படத்திற்கான வரவேற்பு சிறப்பாக அமைந்த நிலையில், கடந்த 4 நாட்களில் படத்தின் வசூல் 50 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த மாவீரன், அயலான் படங்கள் பேன்டசி கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் கமல் தயாரித்துள்ள எஸ்கே21 படத்தின் டைட்டில் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு அயலான் படம் நிதி சிக்கலில் இருந்த நிலையில், சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X