Ayalaan movie: அயலான் படத்தின் ரிலீஸ் கன்ஃபார்ம்.. நீதிமன்ற தடை நீங்கியதால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உருவாகிவந்த இந்தப்படம் பல்வேறு நிதி பிரச்சினைகளாலும் சிஜி வேலைகள் அதிக காலங்களை எடுத்துக் கொண்டதாலும் படத்தின் ரிலீஸ் கால தாமதமாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏலியனை மையமாக கொண்டு இயக்குநர் ரவிக்குமார் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப படத்தின் டீசர், டிரெயிலர் உள்ளிட்டவையும் வெளியாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படம் 5 ஆண்டுகளை கடந்து ரிலீசுக்கு அதிகமான நாட்களை எடுத்துக் கொண்ட நிலையில், படத்தில் நிதி பிரச்சினைகளும் அதிகமான அளவில் இருந்து வந்தது. இதுவும் ரிலீஸ் தாமதமாக ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது. அயலான் படத்தை தயாரித்த 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் டிஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனும் படத்தின் ரிலீசை தாமதப்படுத்திய நிலையில் தற்போது கேஜேஆர் ஸ்டூடியோஸ் இந்த விஷயத்தை சுமூகமாக கையாண்டிருந்தது. இதனால் படத்தின் ரிலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டது.

Actor Sivakarthikeyans Ayalaan movie going to release tomorrow as announced earlier

அயலான் படம்: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் 5 ஆண்டுகளாக ரிலீசுக்காக போராடி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் என்னமோ 85 நாட்களில் நிறைவு பெற்றது. இருந்தாலும் படத்தின் சிஜி வேலைகள் அதிக கால தாமதத்தை ஏற்படுத்தியது. இவற்றிற்கு அதிகமான நிதி தேவைப்பட்ட நிலையில் படத்தின் தாமதத்திற்கு இதுவும் காரணமாக கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் கேரியரில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீசில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்தப் படத்திற்காக அவர் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: இதை தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன், படமா, சம்பளமா என்ற கேள்வி வந்தபோது, தான் படத்தின் ரிலீசின் பக்கம் நின்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதேபோல இந்தப் படத்திற்காக இயக்குநர் ரவிக்குமாரும் சம்பளம் பெறவில்லை என்றும் படத்தின் ரிலீசை தொடர்ந்தே அவருக்கு சம்பளம் செட்டில் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் படத்தின் உருவாக்கத்திற்காக படத்தை தயாரித்த 24 ஏஎம் ஸ்டூடியோஸ் முன்னதாக டிஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்று அதை திரும்பக் கொடுக்காமல் திணறிய நிலையில், படத்தை கையிலெடுத்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் அந்த பிரச்சினையில் சுமூக தீர்வை கண்டது.

ரிலீஸ் கன்ஃபார்ம்: படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு தரவேண்டிய 1 கோடி ரூபாயை செலுத்தாமல் படம் வெளியிட தடை கேட்டு எம்எஸ் சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் எம்எஸ் சேலஞ்ச் நிறுவனத்திற்கு தயாரிப்பு தரப்பு தற்போது 50 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளது. மேலும் மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை ஏப்ரல் 10ம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக அயலான் படம் வெளியாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

5 வருட உருவாக்கம்: ஏலியனை மையமாக வைத்து சிறப்பான முயற்சியை சிறப்பான தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற ரவிக்குமாரின் ஆசைக்கு ஓகே சொன்னதன் விளைவாக அயலான் படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தின் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்றும் ஆனால் அதிகமான பட்ஜெட்டை கொடுக்க முடியாத நிலையில், சில திட்டங்களுடன் இந்த காட்சிகளை எடுத்துள்ளதாகவும் முன்னதாக ரவிக்குமார் பேட்டியொன்றில் கூறியுள்ளார். இந்தப் படத்திற்காக தன்னுடைய 5 வருடங்களை உபயோகித்துள்ளதாகவும் மற்ற படங்களையும் கமிட் செய்யாமல் உழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்: சிவகார்த்திகேயனும் இந்தப் படத்திற்காக தன்னுடைய அதிகமான உழைப்பை கொடுத்துள்ளார். மேலும் தற்போது நிதி பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இத்தகைய அனைவரின் உழைப்பு, நம்பிக்கைகளுக்கிடையில் அயலான் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. படத்தின்மீதான வழக்குகளும் சுமூகமாக எதிர்கொள்ளப்பட்டுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் நாளை கன்பார்ம் ஆகியுள்ளது. இந்த விஷயம் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் அதிகமான உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஹாலிவுட் தரத்தில், கான்செப்டில் ஒரு தமிழ்ப்படம் வெளியாவதும் அவர்களை அதீத எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X