Ayalaan teaser: லியோவுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.. அட சூப்பர்தான்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் மாஸ் காட்டியது. 80 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வசூலை பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது SK21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.
இதனிடையே நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்துடன் கூட்டணி அமைக்க சிவகார்த்திகேயன் திட்டம்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை அறிவித்து கமிட்டாகி வருகிறார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
காஷ்மீரில் தொடர்ந்து கடுமையான குளிருக்கிடையில் எஸ்கே21 படத்தின் சூட்டிங் 75 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தின் போர்க் காட்சிகள் உள்ளிட்டவை காஷ்மீரில் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடித்துள்ளதாக தெரிகிறது. தன்னுடைய ஹேர்ஸ்டைலை வெளிக்காட்டாமல் தொடர்ந்து அவர் தொப்பியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சென்னையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது. இதில் படத்தின் நாயகி சாய் பல்லவி இணைந்துள்ளார். இதனிடையே ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ரவிக்குமார். படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுத்து முடிக்க காலதாமதம் ஆவதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் நாளைய தினம் அயலான் படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், டீசரும் இரு மொழிகளில் நாளைய தினம் வெளியாகவுள்ளது. 2.8 நிமிடங்கள் வெளியாகவுள்ள இந்த டீசரின் சென்சாரும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை லியோ படத்துடன் இணைக்க அயலான் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் லியோ படம் ரிலீசாகவுள்ள நிலையில், அதன் இடைவேளையின்போது அயலான் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











