Ayalaan trailer: ஏலியனுடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன்.. வெளியானது அயலான் பட ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக இருந்த நிலையில் படத்தின் சிஜி வேலைகள் நிறைவடையாததால் தற்போது பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஏலியன் உருவ பொம்மை வைக்கப்பட்டு ரசிகர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அயலான் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவரும் தொழில்நுட்பங்களுடன் படம் உருவாகியுள்ளதை இந்த ட்ரெயிலர் காட்டுகிறது. இந்த ட்ரெயிலரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெயிலரும் ரசிகர்களை கவரும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவரும் இந்தப் படம் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பான அம்சகங்களுடன் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Sivakarthikeyans Ayalaan movie trailer released

அயலான் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அயலான் படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று நேற்று நாளை என்ற சிறப்பான சயின்ஸ் பிக்ஷன் படத்தை கொடுத்துள்ள இயக்குநர் ரவிக்குமாரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது அயலான். இந்தப் படத்திலும் ஏலியனை மையமாக கொண்டு சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்திலேயே படத்தை உருவாக்கியுள்ளார் ரவிக்குமார். இந்தப் படம் வரும் 12ம் தேதி பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக முடுக்கி விட்டுள்ளனர்.

அயலான் ட்ரெயிலர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்வகையில் ஏலியன் உருவ பொம்மை வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஏலியன் பக்கத்தில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ஏலியனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படத்தின் ட்ரெயிலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Actor Sivakarthikeyans Ayalaan movie trailer released

ஏலியனுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்: இந்தப் படத்தில் மிகவும் எளிமையான இளைஞராக நடிகர் சிவகார்த்திகேயன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த பூமிக்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்படும் ஆபத்தை ஏலியனின் துணையுடன் அவர் முறியடிப்பதாக இந்த ட்ரெயிலரில் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் சூட்டிங் 85 நாட்களில் நடந்து முடிந்த நிலையில் சிஜி வேலைகள் மட்டுமே அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டதாக முன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

Actor Sivakarthikeyans Ayalaan movie trailer released

அதிகமான VFX காட்சிகள்: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரில் படத்தின் VFX எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. பாடல்களிலும் இவை எதிரொலிக்கின்றன. பாடல்களில் ஏஆர் ரஹ்மானின் இசை செய்துள்ள பங்கும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படத்தில் போடப்பட்டுள்ள உழைப்பிற்கு ஏற்ப ஊதியத்தை படம் கண்டிப்பாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பிற்கேற்ற என்டர்டெயின்மெண்டை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X