Ayalan: துருவ நட்சத்திரம் படத்துடன் போட்டிபோடும் அயலான்.. எந்த விஷயத்துல தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. சிஜி வேலைகளும் படத்தின் ரிலீசை தள்ளிப் போட்டன.
நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அயலான் படத்தை இயக்கியுள்ளார் ரவிக்குமார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படம் ஐந்து ஆண்டுகளை கடந்து உருவாகிவரும் சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பொங்கலுக்கு ரிலீசாகும் அயலான்: ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பிரீ பிசினஸ் மிகப்பெரிய அளவில் இருந்தது. குறிப்பாக இந்தியிலும் இந்தப் படம் மிகச்சிறப்பான விலைக்கு கைமாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பல நாடுகளில் அதிகமான எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் குழந்தைகளை அதிகமாக கவரும் என்று கூறப்பட்டுள்ளது.
காலதாமதமான ரிலீஸ்: 95 நாட்களில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டதாக முன்னதாக பேட்டியொன்றில் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் VFX பணிகள் அதிக காலத்தை எடுத்துக் கொண்டதாகவும் தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் பொங்கலுக்கு தள்ளிப் போனதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படம் அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.
விக்ரமின் துருவ நட்சத்திரம்: விக்ரம் -கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் போன்றே, அயலான் படமும் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திலேயே வெளியாகவிருந்த துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது அயலான் படமும் இணைந்துள்ளது. இந்த சிக்கல்களில் இருந்து மீண்டும், குறிப்பிட்டபடி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், படம் குறிப்பிட்டபடி பொங்கலுக்கு ரிலீசாகாது என்றே தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படம்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அவரது மாவீரன் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதையடுத்து அவரது நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகிவருகிறது எஸ்கே21. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அயலான் படம் வெளியாகவுள்ள அறிவிக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











