Sivakarthikeyan: எம்ஜிஆருக்கு அப்புறம் நான்தான்னு போட்டுடாதீங்க.. உஷாராக பேசிய சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி கலெக்ஷனில் மாஸ் காட்டியது. படம் சர்வதேச அளவில் 80 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங் தொடர்ந்து 75 நாட்கள் நடத்தப்பட்டது.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளிப் போன அயலான் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயலான் பட டீசர் வெளியீட்டில் உஷாரான சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyans Ayalan movie teaser released and his speech gets attraction

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் தொடர்ந்து 75 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துவரும் நிலையில், தன்னுடைய ஹேர்ஸ்டைலையும் வெளிப்படுத்தாமல் குல்லா போட்டுக் கொண்டிருந்தார். அடுத்ததாக சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வழக்கமான ஹேர்ஸ்டைலில் காணப்படுகிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் சிஜி வேலைகளுக்காக படக்குழுவினர் அதிகமாக மெனக்கெட்டுள்ளனர். இதனால் இந்தப் படம் காலதாமதம் ஆகியுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பொங்கலுக்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் இந்தப் படத்தின் டீசர் வெளியீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னதாக எம்ஜிஆர் இதுபோல ஏலியனை மையமாக வைத்து ஒரு படத்தை எடுத்ததாக இயக்குநர் தன்னிடம் கூறியதாகவும் அதற்கு பிறகு தாங்கள்தான் இந்த கான்செப்டில் திரைப்படம் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். தமிழ் சினிமாவில் வருடங்கள் கடந்து இதுபோன்ற கான்செப்டில் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Actor Sivakarthikeyans Ayalan movie teaser released and his speech gets attraction

உடனடியாக அவர் யூடியூபர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தார். எம்ஜிஆருக்கு பிறகு நான்தான் என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக தயவுசெய்து போட்டுவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். எம்ஜிஆர் காலத்தில் முயற்சித்ததை அடுத்து தற்போதுதான் இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார். இந்தப் படத்தில் தன்னை பார்க்க தனக்கே மிகவும் பிடித்ததாகவும் சிவகார்த்திகேயன் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X