Actor Sivakarthikeyan: கல்லூரி காலத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. என்னவொரு அடக்கம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் ஆங்கராக இருந்து சினிமாவிற்கு தாவியவர். துவக்கத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தைப் பெற்றார்.

தற்போது ஆக்ஷன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அமரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 படத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அமரன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அதிகப்படியான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அமரன் படம்: அமரன் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்ததாக தன்னுடைய எஸ் கே 23 படத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாசுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இந்த படத்தில் இருந்து சில தினங்கள் கேப் எடுத்துக் கொண்டு அமரன் படத்தில் எஞ்சியிருந்த காட்சிகளில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கல்லூரி கால வீடியோ: இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தன்னுடைய நண்பர்களுடன் இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் காணப்படுகிறார். மிகவும் ஒல்லியாக, சிவகார்த்திகேயனா இது என்று கேட்கும் அளவிற்கு அந்த வீடியோவில் அவர் காணப்படுகிறார். தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து குட்டி கலாட்டா செய்யும் வகையில் இந்த வீடியோ காணப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் மிகவும் பவ்யமாக கைகட்டி போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

ஆக்ஷனுக்கு மாறிய சிவகார்த்திகேயன்: இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகிவரும் எஸ்கே23 படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவு செய்யப்பட்டு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் ஆங்கராக செயல்பட்டு வந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனுசு உடன் 3 படத்தில் இணைந்து காமெடி கலாட்டா செய்திருந்தார். இதனிடையே மெரினா உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வந்த அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பான கவனம் பெற்று தற்போது தன்னுடைய ஜானரை ஆக்ஷன் களத்திற்கு மாற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X