Sivakarthikeyan: டாக்டர் டூ அமரன்.. சிவகார்த்திகேயனிடம் இப்படி ஒரு சேஞ்சா.. மனுஷன் பின்றாரே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறது. கடந்த மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இதனால் படக்குழுவினர் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர். இதையடுத்து சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர் மற்றும் டான் படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் அமரனும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

sivakarthikeyan amaran movie doctor movie

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என அடுத்தடுத்த கட்டங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அவரது நடிப்பில் தீபாவளி கொண்டாட்டமாக அமரன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் அவர் ராணுவ மேஜராக முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். அமரன் படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதிரடி ஆக்ஷனில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் அவர் இந்த படத்தில் பின்னி பெடல் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் வசூல் கடந்த மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாயாக உள்ளது.

உற்சாகத்தில் அமரன் டீம்: இதனால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனும் தன்னுடைய நன்றிகளை ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரின் பனிபடர்ந்த சூழலில் மிகவும் சிரமங்களுக்கு இடையில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த சிரமங்களுடன் இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான அறுவடையை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி எடுத்து முடித்துள்ளார்.

3 நாட்களில் 100 கோடி வசூல்: இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தன்னை சூப்பர் ஹிட் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படம் கடந்த மூன்று நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்து இருந்தது. ஆனால் டாக்டர் படம் 25 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் டான் படம் 12 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் தற்போது அமரன் படம் மூன்றே நாட்களில் இந்த சாதனையை செய்துள்ளது.

சிவகார்த்திகேயனின் சூப்பர் சேஞ்ச்: இதனால் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி பட ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். கோட் படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை சிவகார்த்திகேயன் வாங்குவதாக காட்சிகள் அமைந்திருந்தன. இதையடுத்து விஜய் சினிமாவில் விட்டு சென்ற இடத்தை அவர் தொடர்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் படம் வசூலில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இன்றும் வார இறுதி நாளாக உள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X