Maaveeran: சென்சாரும் முடிஞ்சிடுச்சு.. மாவீரன் படத்தின் புதிய அப்டேட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன்.
இந்தப் படம் வரும் ஜூலை 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது. தற்போது படத்திற்கான பிரமோஷன்கள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் சென்சார் நிறைவு: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக முன்னதாக திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் ரஜினியின் ஜெயிலர் படமும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது மாவீரன் படம் இந்த மாதமே 14ம் தேதி ரிலீசாவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் படத்திற்கான பிரமோஷன்களில் முழுவீச்சில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் படம் ரஜினிகாந்தின் மாவீரன் படத்தின் டைட்டிலை கொண்டுள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரீ பிரமோஷன்களில் பங்கேற்ற நடிகை சரிதா மற்றும் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனை குட்டி சூப்பர்ஸ்டார் என்று புகழ்ந்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர், டீசர் என வெளியாகி படத்திற்கு சிறப்பான பிரமோஷன்களை கொடுத்துள்ளன.
முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ள வண்ணாரப்பேட்டையில பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் மூன்றாவது சிங்கிள் வா வீரா வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். அவரது முதல் படம் மண்டேலா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நிலையில், இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் மற்றும் டான் படங்களை வெற்றிப்படங்களாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைய வைத்தார் சிவகார்த்திகேயன். அவரது அடுத்தப்படம் பிரின்ஸ் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சொதப்பிய நிலையில், இந்தமுறை வெற்றி மிஸ்ஸாகாது என்று அவர் பிரீ ரிலீஸ் விழாவில் குறிப்பிட்டிருந்தார். அவரது நம்பிக்கை பொய்க்காது என்பதாகவே படத்தின் அப்டேட்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது படத்தின் சென்சாரும் நிறைவடைந்துள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரன் டைம் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 26 நிமிடங்கள் ரன் டைமை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பயந்தாங்கொள்ளியான சிவகார்த்திகேயன், அமானுஷ்ய சக்தி ஒன்றால் தொடர்ந்து சிறப்பான பல விஷயங்களை செய்வதாக கதைக்களம் காணப்படுகிறது. இந்த சக்திக்கான வாய்ஸ் ஓவருக்காக ரஜினி மற்றும் கமலிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களால் இதற்கான நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில், இந்த வாய்ஸ் ஓவரை பிரபல நடிகர் ஒருவர் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











