Maaveeran: வசூல் சாதனை படைக்கும் மாவீரன்.. விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என கணிப்பு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, மிஷ்கின், சரிதா என முன்னணி நட்சத்தரங்களின் கூட்டணியில் கடந்த வாரத்தில் வெளியான படம் மாவீரன்.
பிரின்ஸ் படத்தின் தோல்வியை தொடர்ந்து மாவீரன் படத்தை வெற்றிப் படமாக ஆக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது.

70 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டிய மாவீரன்: நடிகர் சிவகார்த்தியேனின் பிரின்ஸ் படம் சொதப்பிய நிலையில் கடந்த வாரத்தில் அவரது மாவீரன் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்மழை பொழிந்து வருகிறது. படம் வெளியாகி சில தினங்களிலேயே அதிகமான கலெக்ஷனை அள்ளியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பு, தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை காட்டி வருகிறார். மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிய நிலையில், படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு, சரிதா என மற்ற நடிகர்கள், நடிகைகளும் தங்களது கேரக்டரை சிறப்பாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக காஷ்மீரிலிருந்து எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிலிருந்து வந்திருந்தார் சிவகார்த்திகேயன். மேலும் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்திலும் அவர் காஷ்மீரிலிருந்து வந்ததை பார்க்க முடிந்தது. கமல் தயாரிப்பில் உருவாகிவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் சாய் பல்லவி.
மாவீரன் படத்தின் வசூல் கடந்த 9 நாட்களில் சர்வதேச அளவில் 69 கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் படத்தின் வசூல் 40 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான், 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கைக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதேபோல சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் படம் அவருக்கு சொதப்பியது. இந்நிலையில் தற்போது மாவீரன் படம் அவரது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளது. இதையடுத்து அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் அயலான் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











