Sivakarthikeyan: ஜூலை 2ம் தேதி நடக்கும் மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா.. வீடியோ வெளியிட்ட படக்குழு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், யோகிபாபு உள்ளிட்டடோர் லீட் கேரக்டர்களில் நடிக்க ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் மாவீரன்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 14ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீசையொட்டி தற்போது முன்னதாகவே படம் ரிலீசாகவுள்ளது.
மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: பிரின்ஸ் படத்தின் சொதப்பலை தொடர்ந்து தற்போது அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அதீதி ஷங்கர். விருமன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார் அதீதி. மேலும் படத்தில் யோகிபாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட்டில் படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த மாதத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னதாக ஜூலையிலேயே படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார்.
இந்தப் படம் இன்னும் இரு வாரங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், முன்னதாக படத்தின் இசை வெளியீடு சிறப்பான வகையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா, சென்னையில் சாய்ராம் இன்4னியரிங் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் ஜூலை 2ம் தேதி இந்த விழா கல்லூரி மாணவர்கள் மற்றும் ரசிகர்களுக்கிடையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோ ஒன்றை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் படத்தின் மேக்கிங் வீடியோவும் இணைந்துள்ளது. மேலும் ப்ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், அதீதி, யோகிபாபு மற்றும் மிஷ்கின் ஆகியோர் காணப்படுகின்றனர். குறிப்பாக மிஷ்கின் இந்தப் படத்தில் மாறுபட்ட மற்றும் மிரட்டலான லுக்கில் காணப்படுகிறார். படம் அரசியல் சார்ந்த கதையாக உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சின்னத்திரை மூலம் சினிமாவில் கால் பதித்தவர் சிவகார்த்திகேயன். ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பாடலாசிரியராகவும் பன்முகம் காட்டி வருகிறார். இந்தப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைமும் பெற்றுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதீதி ஷங்கள் இணைந்து பாடியுள்ள வண்ணாரப்பேட்டையில பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











