மதுரை சூட்டிங் நிறைவு.. ஓவர் டூ இலங்கை.. சிவகார்த்திகேயனின் பராசக்தி டீம் பிளான் என்ன தெரியுமா?

மதுரை: நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சூரரை போற்று படம் ஏற்படுத்திக் கொடுத்த மிகச்சிறப்பான என்ட்ரியை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் சூர்யா இணைந்திருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தி திணிப்பை மையமாக வைத்து இந்தப் படத்தை பீரியட் படமாக உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா. படத்தில் ரவி மோகன் வில்லனாகியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இதை இயக்குநர் சுதா கொங்கரா உறுதி செய்துள்ளார்.

Sivakarthikeyan Parasakthi movie Sudha kongara

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்து 300 கோடிகளை தாண்டி வசூலித்திருந்தது. மேஜர் முகுந்தின் பயோபிக்கை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்த சாய் பல்லவியின் நடிப்பும் மிகுதியான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பராசக்தி படம்: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் அவரது நடிப்பில் உருவாகவுள்ள நிலையில் இந்தப் படம் வரும் கோடை விடுமுறையை மையமாக கொண்டு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் அவருடன் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

Sivakarthikeyan Parasakthi movie Sudha kongara

முதல் கட்ட சூட்டிங் நிறைவு: படத்தின் முதல் கட்ட சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிள்ளையார்பட்டியில் சுதா கொங்கரா மற்றும் அதர்வாவுடன் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்யும்படியான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி படத்தின் BTS காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பிரியாணி விருந்தும் கொடுத்திருந்தார்.

Sivakarthikeyan Parasakthi movie Sudha kongara

சுதா கொங்கரா உற்சாகம்: இந்நிலையில் மதுரையில் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்தது குறித்து படத்தின் இயக்குநர் சுதா கொங்கரான உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்த கிரகத்தில் தனக்கு மிகவும் பிடித்தமான மதுரையில் பர்ஸ்ட் ஷெட்யூல் நடந்து முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து படக்குழுவினர் இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்காக விரைவில் இலங்கை செல்லவுள்ளனர். இந்த தகவலை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரவி மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100வது படமாகவும் உருவாகி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X