Actor Sivakarthikeyan: சூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன்.. அட கெட்டப்பையே மாத்திட்டாரே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தன. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ்கே23. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Sivakarthikeyan tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏகே 23 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் படங்கள் மாஸ் ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் அமரன் படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து இன்னும் பட குழுவினர் அறிவிக்காத நிலையில் படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்துள்ளது.

அமரன் படம்: இந்நிலையில் அமரன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன்ஸ் பணிகளும் நிறைவடைந்துள்ளன. படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரின் பனிபடர்ந்த இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆக்ஷன் என்டர்டைனராக உருவாகி வரும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

எஸ்கே 23 பட சூட்டிங் ஸ்பாட்: இந்த படத்தின் சூட்டிங்கும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் தன்னுடைய டீமுடன் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்கிறார் சிவகார்த்திகேயன். முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் அவர் கிளீன் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது அடர்த்தியான தாடி மற்றும் மீசையுடன் அவர் நடித்து வருவது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. அமரன், எஸ்கே23 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Sivakarthikeyan tamil cinema

அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட இயக்குநர்களுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் படம் மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் அடுத்ததாக ஓடிடியில் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது குறித்தும் அவர் வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X