SK21: முதல் ஷெட்யூலிலேயே எகிறிய SK21 படத்தின் பட்ஜெட்.. தயாரிப்பாளர் கமலின் பெருந்தன்மை!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவருகிறது SK21 படம். படத்தில் ராணுவ மேஜராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Actor Sivakarthikeyans SK21 movie budget Increased and the reaction of Kamal haasan on this issue

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மே 5ம் தேதி பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் நடைபெறும் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.

எகிறிய எஸ்கே21 படத்தின் பட்ஜெட் -கமலின் பெருந்தன்மை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் எஸ்கே21. வரும் 14ம் தேதி சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து தீபாவளி ரிலீசாக அயலான் படமும் ரிலீசாகவுள்ள நிலையில், கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக எஸ்கே21 படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Actor Sivakarthikeyans SK21 movie budget Increased and the reaction of Kamal haasan on this issue

கடந்த மே மாதம் 5ம் தேதி இந்தப் படத்தின் பிரம்மாண்டமான பூஜை போடப்பட்டு, தொடர்ந்து சூட்டிங்கும் துவங்கப்பட்டது. இந்நிலையில் மாவீரன் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்றுவரும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து சூட்டிங்கில் பங்கேற்க முடியாமல், காஷ்மீருக்கும் சென்னைக்கும் மாறி மாறி பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இல்லாத நாட்களில் அதற்கேற்ப மற்ற நடிகர்களின் போர்ஷன்களை இயக்கி வருகிறார் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

முன்னதாக காஷ்மீரில் துவங்கிய சூட்டிங் சில தினங்களிலேயே பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, மீண்டும் துவங்கப்பட்டது. இந்நிலையில் படத்திற்கு திட்டமிட்ட பட்ஜெட்டை காட்டிலும் இன்னும் 20 கோடி ரூபாய் அதிகமாக வாய்ப்புள்ளதாக நடிகர் கமல்ஹாசனிடம் இயக்குநர் கூறியுள்ளார். இதையடுத்து தயாரிப்பு நிர்வாகிகளிடம் பேசிய கமல், கூடுதலாக செலவாகும் தொகையை தன்னுடைய சொந்தக் கணக்கில் குறித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Actor Sivakarthikeyans SK21 movie budget Increased and the reaction of Kamal haasan on this issue

மேலும் இயக்குநரை சுதந்திரமாக செயல்பட விடுமாறும் கமல்ஹாசன் நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இறுக்கிப்பிடிக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் சினிமா மற்றும் அதன் பட்ஜெட் மாறுபாடு குறித்து அறிந்துள்ள கமல்ஹாசனின் பெருந்தன்மை படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எஸ்கே21, STR48, விக்னேஷ் சிவன் படம் என அடுத்தடுத்த படங்களை கமல் தயாரிக்கவுள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் படம் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை படத்தின் ஒருமாத சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் சூட்டிங் காஷ்மீரில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சென்னை திரும்பும் படக்குழுவினர், அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீரில் உள்ள நடிகை சாய் பல்லவி, அடுத்தடுத்த புகைப்படங்களை அழகான பேக்கிரவுண்டில் வெளியிட்டு வருகிறார். அவரது புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளன. அழகான நதி, பச்சைப்பசும் புல்வெளி என அவர் புகைப்படங்களை எடுத்து தள்ளுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X