SK21: சிவகார்த்திகேயனின் சூட்டிங் ஸ்பாட் போட்டோ.. எஸ்கே21 படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்று வந்தார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்ற இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

Actor Sivakarthikeyans SK21 movie Kashmir Schedule wrapped up

சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவு: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார். அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து கடந்த தீபாவளி ரிலீசாக வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது. ஆனால் சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் நடித்துவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங் கடந்த 75 நாட்களாக தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.

தொடர்ந்து தன்னுடைய ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தாமல் இருந்த சிவகார்த்திகேயன், இந்தப் புகைப்படங்களில் ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் யாரென்றே தெரியாதவண்ணம் அவர்மீது வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. மேலும் படக்குழுவினர் அனைவரும் வண்ணங்களை பூசியபடி இந்தப் புகைப்படங்களில் காணப்படுகின்றனர். தற்போது தொடர்ந்து 75 நாட்களுக்கான சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கை சென்னையில் துவங்கவுள்ளனர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத எஸ்கே21 படத்தில் ராணுவ வீரராக நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். படத்தில் அவருக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார். காஷ்மீரில் இந்தப் படத்தின் போர்க்காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டுள்ளதாக முன்னதாக படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Actor Sivakarthikeyans SK21 movie Kashmir Schedule wrapped up

முன்னதாக இந்தப் படம் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், போர் காட்சிகளை அதிகமாக கொண்ட படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும், மிகவும் சீரியசான கதைக்களத்தில் படத்தின் கதைக்களம் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் நல்ல டான்சர்கள் என்பதால், அவர்களின் சிறப்பான டான்சை வெளிப்படுத்தும் வகையில் படத்தில் பாடல் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். கதைக்குள்ளேயே பயணம் செய்யும் வகையில் இந்தப் பாடல் அமையும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X