Sivakarthikeyan: காஷ்மீர் டூ சென்னை - சென்னை டூ காஷ்மீர்.. எஸ்கே21 பட அப்டேட்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் பெற்றுள்ளது.

முன்னதாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களை போல மாவீரன், 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. அடுத்தடுத்த படங்களின் வரவும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டாததற்கு காரணமாக அமைந்தது.

Actor Sivakarthikeyans SK21 movie Kashmir shooting to be wrapped in few days

விரைவில் நிறைவடையும் சிவகார்த்திகேயனின் எஸ்கே21 பட காஷ்மீர் ஷெட்யூல்: நடிகர் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் மாஸ் காட்டி வருகிறார். படத்திற்கு படம் தன்னுடைய பாடி லேங்குவேஜிலும் நடிப்பிலும் சிறப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது டாக்டர் படத்தில் ராணுவ மருத்துவராக அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த நிலையில், அடுத்ததாக வெளியான டான் படத்தில் இவரது வழக்கமான அலப்பறைகளை பார்க்க முடிந்தது. இந்த இரு படங்களுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தன.

தொடர்ந்து இரு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான பிரின்ஸ் படமும் வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப்படம் ரசிகர்களை கவராமல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் அவரது ஹாட்ரிக் வெற்றிக்கனவு தகர்ந்தது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் சிவாவிற்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவில்லை என்றபோதிலும் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 80 கோடி ரூபாய் கலெக்ஷனை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராணுவ வீரராக இந்தப் படத்தில் சிவா நடித்துவரும் நிலையில், படத்தில் தன்னுடைய ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவற்றை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார். சமீப காலங்களில் அவரை தொப்பியுடனேயே பார்க்க முடிந்தது. கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரு தினங்களில் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவகையில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய போர்க் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகை சாய் பல்லவி பங்கேற்கவுள்ளார். சென்னை ஷெட்யூலை தொடர்ந்து மீண்டும் படத்தின் சூட்டிங் காஷ்மீரிலேயே நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் கேரியரில் மிகவும் அழுத்தமான கதைக்களமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கேரியரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படமாக எஸ்கே21 உருவாகிவருவதாகவும் படக்குழு பெருமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து சிறப்பான கதைக்களத்துடன் கூடிய கமர்ஷியல் படங்களில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின்மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி சிறப்பான வெற்றிக்கூட்டணியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X