Sivakarthikeyan: மீண்டும் லீக்கான சிவகார்த்திகேயன் படத்தின் காட்சிகள்.. என்ன இப்படி ஆகிடுச்சு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.
மாவீரன் படத்தின் சூப்பர் ஹிட்டை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மட்டும் ஏறக்குறைய 3 மாதங்கள் எடுக்கப்பட்டன.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் இந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்து வருகிறார். இதற்காக வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் அவர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சில மாதங்கள் தன்னுடைய ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தாமல் இருந்தார் சிவகார்த்திகேயன்.
காஷ்மீர் சூட்டிங்: காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் எடுத்து முடிக்கப்பட்டன. தற்போது சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் சில பேட்ச் வேலைகளுக்காக படக்குழுவினர் காஷ்மீர் போகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் அதிகமாக போனதால், தற்போது சென்னையிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் லீக்கான காட்சிகள்: இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதில் படத்தின் நாயகி சாய் பல்லவி குழந்தையுடன் நின்றிருக்கும் படியாக காணப்பட்டது. இதன்மூலம் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தங்களது யூகங்களை இணையதளத்தில் பதிவிட்டனர்.
மீண்டும் இணையத்தில் லீக்: இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் அடுத்த காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் படக்குழுவினரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள காட்சியில் ராணுவ முகாமில் சாய் பல்லவி இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் இளம் ராணுவ வீரராக உடனிருப்பதாகவும் உள்ளது- அடுத்தடுத்து இவ்வாறு படத்தின் காட்சிகள் லீக்காவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் போட்டோஷுட்: இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் எஸ்கே படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள போதிலும் கண்ணாடி முன்பு மீசை இல்லாமல் கிளீன் ஷேவுடன் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











