Actor Sivakarthikeyan: இணையத்தில் லீக்கான SK21 படத்தின் காட்சிகள்.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் படம் எஸ்கே 21. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில், தன்னுடைய உடலை மிக அதிகமான பிட்னசுடன் அவர் பராமரித்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கணவன் -மனைவியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Sivakarthikeyans SK21 movie scenes leaked in Social media

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் எஸ்கே21. இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட சூட்டிங்கில் உள்ள நிலையில் விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் சூழலில் முன்னதாக காஷ்மீரில் ஏறக்குறைய 3 மாதங்கள் படத்தின் சூட்டிங் நடந்துள்ளது.

கமல் தயாரிப்பு: கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகரித்ததாக முன்னதாக இந்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி கணவன் -மனைவியாக நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இணையத்தில் லீக்கான காட்சிகள்: இந்நிலையில் இந்தப் படத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் காட்சியில் சாய்பல்லவி மற்றும் அவரது குழந்தை, சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன. இதனிடையே இந்தக் காட்சிகளை பகிர வேண்டாம் என்று சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேட்டு வருகின்றனர்.

Actor Sivakarthikeyans SK21 movie scenes leaked in Social media

அடுத்த ஆண்டு ரிலீஸ்: கடந்த அக்டோபரில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது. முன்னதாகவே படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி படக்குழுவினர் ஒருபக்கம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

இறுதிக்கட்டத்தில் சூட்டிங்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில், எஸ்கே 21 படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்தப் படங்களில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்து தற்போது எஸ்கே21 படத்திலும் அதே உற்சாகத்துடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X