Sivakarthikeyan: விஜயகாந்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்.. 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூட்டிங்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தயாரிப்பாளராகவும் டாக்டர், டான் போன்ற படங்களை தயாரித்து 100 கோடி கிளப்பில் இணைத்து மாஸ் காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் மாவீரன் என்ற பேன்டஸி திரைப்படத்திலும் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான அயலான் என்ற சயின்ஸ் பிக்ஷசன் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விஐடி கல்லூரியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் மெரினா ரயில் நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ரயில் நிலையத்தில் சிவகார்த்திகேயன் இருக்கும்படியான புகைப்படம் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்: ஏராளமான ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவராக காணப்படுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக தனுஷுடன் 3 படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்த நிலையில் மெரினா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயன் நடிப்பில் காமெடி கலாட்டாக்களாக வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தந்தன,

வெற்றிப்பட நாயகன்: இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார் சிவகார்த்திகேயன். காமெடி மட்டுமில்லாமல் ஆக்ஷன் களத்திலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி பட நாயகனாக வலம் வந்தார். தற்போது தன்னுடைய பாதையை ஆக்ஷன் களத்தில் முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான அயலான் படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளன. இந்த படங்களை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
எஸ்கே 23 பட சூட்டிங்: அமரன் படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய எஸ்கே 23 படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஐடி கல்லூரியில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தற்போது மெரினா ரயில் நிலையத்தில் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
23 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூட்டிங்: இதையொட்டி சிவகார்த்திகேயனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் ரயில் நிலையத்தில் சிவகார்த்திகேயன் இருக்கும் படியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஏஆர் முருகதாஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











