Madharasi: சூப்பர் ஸ்டாருக்காக SK23 பட டைட்டிலை மாற்றிய இயக்குநர்.. அட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங்கை வரும் ஜுன்மாதத்திற்குள் நிறைவு செய்ய இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம்.

கடந்த 17ம் தேதி எஸ்கே 23 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அர்ஜுன் படத்தின் டைட்டில்தான் தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டிலாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இந்த டைட்டிலை வைக்க கரணம் குறித்து சமீபத்தில் படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளிப்படுத்தியிருந்தார்.

Sivakarthikeyan Madharasi movie AR Murugados

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது அமரன். இந்தப் படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியானது. இந்தப் படத்தில் நிஜமான ராணுவ மேஜரை நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் சிவகார்த்திகேயன். அவரது மனைவி இந்துவாக நடித்திருந்த சாய் பல்லவியும் அதிகமான ஸ்கோர் செய்திருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் 320 கோடிகளை தாண்டி வசூலித்தது. படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 23வது படமான இந்தப் படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் சில சுவாரஸ்யங்கள் குறித்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை பார்க்கும் பார்வையாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மதராஸி படம்: அதனால் மதராஸி என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு பொருத்தமாக அமையும் என்று தான் நினைத்ததாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஆக்ஷன் படங்களில் நடித்துவரும் சிவகார்த்திகேயனை வேறு லெவலில் மதராஸி படம் இட்டு செல்லும் என்றும் கூறியுள்ளார். அக்ஷன் படமாக இருந்தபோதிலும் படத்தில் அழகான காதலும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் சார்ந்த ஒரு தனித்துவமான விஷயத்தையும் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் வில்லன் வித்யுத் ஜம்வால் குறித்து பேசிய ஏஆர் முருகதாஸ், படத்தின் கதையை கேட்காமலேயே அவர் ஓகே சொன்னதாக தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்திற்காக மாற்றப்பட்ட டைட்டில்: படத்திற்கு அனிருத்தின் இசை சிறப்பாக அமைந்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்திற்கு ஹண்டர் என்று டைட்டிலே முன்னதாக இறுதிப்படுத்தப்பட்டிருந்ததாம். ஆனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசானதால், ஹண்டர் தலைப்பை பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஹண்டர் என்ற ஆங்கில வார்த்தை வேட்டையன் என்ற அர்த்தத்தை தரக்கூடியதாக இருந்ததால் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில்தான் மதராஸி என்ற டைட்டில் கிடைத்ததாகவும் அதையே பயன்படுத்த முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X