SK24 movie: சூர்யாவை தொடரும் சிவகார்த்திகேயன்.. நாளைக்கு சிறப்பான சம்பவம் இருக்கு!
சென்னை: நடிகர் சூர்யாவின் சூர்யா 45 படத்தின் பூஜை இன்றைய தினம் பொள்ளாச்சியின் மாசாணி அம்மன் கோயிலில் சிறப்பாக போடப்பட்டது. இதையொட்டி அவர் பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் பொள்ளாச்சியிலேயே துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் நடக்கவுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் பூஜை போடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சிபி சக்ரவாத்தியுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைக்களங்களில் நடித்துவந்தாலும் அவருக்கு கங்குவா படம் சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இநத்ப் படம் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை கவரவில்லை. படத்தின் கதைக்களம் புரியவில்லை என்றும் படத்தில் கதையே இல்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படத்தின் விமர்சனங்களும் கலவையாக அமைந்தது. படத்தில் கங்குவன், பிரான்சிஸ் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார் சூர்யா.
சூர்யா 45 பட பூஜை: இந்தப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். பொன்னாச்சியின் மாசாணி அம்மன் கோயிலில் இன்றைய தினம் இந்தப் படத்தின் பூஜை சிறப்பாக போடப்பட்டது. இதில் பட்டு வேட்டி சட்டை சகிதம் சூர்யா கலந்துக் கொண்டார். படத்தின் சூட்டிங் நாளைய தினம் பொள்ளாச்சியிலேயே துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் நடக்கவுங்ளளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவுடன் நீண்ட காலங்களுக்கு பிறகு திரிஷா இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SK24 படத்தின் பூஜை: இந்நிலையில் நாளைய தினம் சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமரன் படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் இணையவுள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன் -சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் பூஜை நாளைய தினம் போடப்பட உள்ளதா கூறப்பட்டுள்ளது.
சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன்: முன்னதாக சிவகார்த்திகேயன் -சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் வெளியான டான் படம் சிறப்பான விமர்சனங்களைபெற்றதுடன் 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்திருந்தது. படத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்த புரிதல் இல்லாத கல்லூரி மாணவனின் கேரக்டரில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இன்றைய தினம் சூர்யாவின் படப்பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில் நாளைய தினம் சிவகார்த்திகேயனின் படத்தின் பூஜை நடக்கவுள்ளது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











