SK25 movie: எஸ்கே 25 பட பூஜை வீடியோ.. ஸ்மார்ட் லுக்கில் வந்த சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம்ரவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் எஸ்கே 25 படத்தினை சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் பாரம்பரிய உடையில் கலந்துக் கொண்டார்.
மேலும் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி, அதர்வா உள்ளிட்டவர்களும் இந்த பூஜையில் கலந்துக் கொண்டனர். புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை துவங்குவதில் சிவகார்த்திகேயனுக்கும் சுதா கொங்கராவிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவற்றிற்கெல்லாம் இந்த பூஜை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான அமரன் படம் மிகப்பெரிய ஹிட்டடிததுள்ளது. இந்தப் படம் அதிரிபுதிரியான வசூலை கொடுத்துள்ள நிலையில், ஓடிடியிலும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே24 படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனிடையே அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகவுள்ளது புறநானூறு படம். இந்த படத்தில் முன்னதாக சூர்யா கமிட்டாகி இருந்த நிலையில் சில காரணங்களால் அவரால் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
எஸ்கே25 படம்: இதையடுத்து தற்போது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் லீட் கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சுதா கங்கிரா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா உள்ளிட்டவர்கள் லீப் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். முன்னதாக சூர்யாவுடன் நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் நடிக்கவிருந்த நிலையில் தற்போது முற்றிலும் புதிய நடிகர்களை வைத்து இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளது. இந்த படத்தின் பிரமோ உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதை உருவாக்குவதில் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
எஸ்கே25 பட பூஜை: இதனால் அந்த ப்ரமோ எடுப்பதை படக்குழுவினர் கைவிட்டு தற்போது நேரடியாக ஷூட்டிங் கிளம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை சென்னையில் மிகவும் சிறப்பாக போடப்பட்டது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்றைய தினம் இந்த பூஜையின் வீடியோவை தயாரிப்பு தரப்பான டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் சிறப்பான லுக்கில் காணப்படுகின்றனர். மிகவும் சிறப்பான வகையில் கலர்ஃபுல்லாக இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
பூஜை வீடியோ: மேலும் இந்த வீடியோவின் இறுதியில் படத்தின் சூட்டிங் இனிதே ஆரம்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூஜையில் பாரம்பரிய உடையில் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் கலந்துக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தி எதிர்ப்பை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ள நிலையில், இந்த பூஜையில் ஆங்காங்கே தமிழ் மொழி எழுத்துக்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. உணர்வுபூர்வமான இந்தக் கதைக்களத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். அவரது இசை இந்தப் படத்திலும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











