»   »  கர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா! - நடிகர் சிவகுமார்

கர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா! - நடிகர் சிவகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா என்று நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார்.

மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இரங்கல் தெரிவித்து சிவகுமார் விடுத்துள்ள அறிக்கை:

Actor Sivakumar condolences Balamuralikrishna's death

பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம். அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள்

ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் ஏபி நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவிளையாடல் படத்தில் டிஎஸ் பாலையா அவர்களுக்கு 'ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா....' என்ற பாடலைப் பாடினார். அந்தப் படம் வெற்றிப் படமாக ஓடிதற்கு அந்த பாடல் 25 சதவிகிதம் காரணம்மாக அமைந்தது. ஏன் என்றால் மாறுபட்ட குரல். மேலும் டிஎஸ் பாலையா வின் நடிப்பு. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஆனால் இளையராஜாவின் இசையில் கவிக்குயில் படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மகளூரில் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார், ராதா வேடத்தில் நடித்தோம். அந்தப் பாடல் 'சின்ன கண்ணன் அழைகிறான்...' என்கிற பாடல். அந்தப் பாடல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காகப் பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

-இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

English summary
Actor Sivakumar has condolenced for the demise of legend Balamuralikrishna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil