»   »  கோவிலாகக் கருதிய தன் சொந்த வீட்டை கல்வி சேவைக்காக நன்கொடையாகத் தந்த சிவகுமார்!

கோவிலாகக் கருதிய தன் சொந்த வீட்டை கல்வி சேவைக்காக நன்கொடையாகத் தந்த சிவகுமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள 'லக்ஷ்மி இல்லத்திருக்கு' குடிபோயுள்ளார்.

நடிகர் சிவகுமார் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான். இந்த வீட்டில்தான் சூர்யா , கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர். இந்த வீட்டில்தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது. பேரன் , பேத்திகள் பிறந்தது இங்கேதான். இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிருக்கு நெருக்கமான ஒரு வீடு.

Actor Sivakumar donates his hopuse to Agaram Foundation

இந்த வீட்டை விட மனமில்லாவிட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுகொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மி இல்லத்திருக்கு சென்றுள்ளனர்.

மக்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பது சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை கல்வி சேவைக்காக துவங்கப்பட்ட அகரம் பௌண்டேஷனுக்கே கொடுத்துவிட்டார் சிவகுமார்.

அகரம் பௌன்டேஷன் சூர்யாவால் தொடங்கப்பட்டு, பின்னர் சூர்யா - கார்த்தி இருவராலும் நிர்வகிகப்பட்டு வருகிறது.

English summary
Actor Sivakumar has donated his T Nagar house to Agaram Foundation
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil