சிவக்குமாரின் பாட்டி மரணம் - வயது 108!
நடிகர் சிவக்குமாரின் பாட்டி பேச்சியம்மாள் (வயது 108) கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காசிகவுண்டன் புதூரில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
நடிகர் சிவக்குமாரின் பாட்டி பேச்சியம்மாள். இவர் காசிகவுண்டன்புதூரில் வசித்து வந்தார். இவருக்கு வயது 108. ஆனால் இந்த வயதிலும் நல்ல ஆரோக்யத்துடன் இருந்து வந்தார்.
இதுவரை உடல் சுகவீனம் அவருக்கு வந்ததே இல்லையாம். அதேபோல மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டதில்லையாம். ஒருமுறை கூட ஊசி போட்டதில்லையாம்.
இந்த அளவுக்கு திடகாத்திரமாக இருந்து வந்த பேச்சியம்மாள் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு 3 மகன்கள், 4 மகள்கள் மூலம் 36 பேரன் பேத்திகள், 200க்கும் மேற்பட்ட கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications