சிவாஜி பையன் காலேஜ் முடிக்கல.. உன் பையனும் முடிக்க மாட்டான்.. சூர்யாவிற்கு சீட் தர மறுத்த லயோலா!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி என அடுத்தடுத்த இடங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியவில்லை என்ற போதிலும் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சூர்யா குடும்பம் சார்பில் அவரது தம்பி கார்த்தி மற்றும் அப்பா சிவகுமார் ஆகியோர் பங்கேற்று தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, வில்லன் நடிகர் பாபி தியோல், நாயகி திஷா பதானி உள்ளிட்டவர்கள் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.
கங்குவா இசை வெளியீடு: இதனிடையே நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உன் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் என அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா மிஸ்ஸிங். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சூர்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான சிவகுமார், சூர்யா குறித்த பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். சூர்யாவிற்கு லயோலா கல்லூரியில் சீட் கேட்டு சென்றபோது அவர்கள் தர மறுத்ததாக சிவகுமார் குறிப்பிட்டார்.
சீட் தர மறுத்த லயோலா: சிவாஜி மகன் மற்றும் பாலாஜி மகன் ஆகியோர் இடையிலேயே படிப்பை நிறுத்திவிட்டு சென்றதாகவும் அதே போல சூர்யாவும் பாதியிலேயே சென்று விடுவார் என்று அவர்கள் கூறியதாகவும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய மகன் கண்டிப்பாக கல்லூரி படிப்பை முடிப்பார் என்று கூறி தான் சீட் வாங்கி வந்ததாகவும் பி.காம் டிகிரியில் படித்த சூர்யா கல்லூரி இறுதியில் நான்கு அரியர்ஸ் வைத்திருந்ததாகவும் சிவகுமார் தெரிவித்துள்ளார். இதனால் கல்லூரி முதல்வரின் பேச்சு உண்மையாகி விடுமோ என்று பயத்தில் சூர்யாவை கையெடுத்து கும்பிட்டதாகவும் ஆனால் சூர்யா கடுமையாக படித்து டிகிரியை நிறைவு செய்ததாகவும் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
குப்பையை கூட்டி பெருக்குவார்: தொடர்ந்து சூர்யா ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும் அங்கு கூட்டி பெருக்கி குப்பையை எடுத்துக்கொண்டு போய் வெளியில் கொட்டும் வேலைகள் உள்ளிட்ட அனைத்தையும் சூர்யா செய்வார் என்றும் சிவகுமார் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து உரிமையாளருக்கு சூர்யா சிவகுமாரின் பையன் என்பது தெரிந்ததாகவும் அவர் இது குறித்து கேள்வி எழுப்ப, அதனால் என்ன என்று சூர்யா பதிலுக்கு கேள்வி கேட்டதாகவும் சிவகுமார் மேலும் தனது பேச்சில் கூறியுள்ளார். நான்கு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் பேச தயங்கும் சூர்யா, தற்போது கங்குவா படத்தில் இணைந்து மிகப்பெரிய மாஸை காட்டியுள்ளதாகவும் அவரது கேரியர் பெஸ்ட்டாக கங்குவா படம் அமைந்துள்ளதாகவும் சிவகுமார் தன்னுடைய சிலிர்ப்பையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











