twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போது வரவு - செலவு பார்க்கும் நேரம் வந்துவிட்டது! - சிவகுமாரின் உருக்கமான பேட்டி

    By Shankar
    |

    Recommended Video

    சிவக்குமார் என்ன பேசுகிறார் இப்போ? | FILMIBEAT TAMIL

    இத்தாலி மொழியில் சிவகுமார் ஆற்றிய மகாபாரத சொற்பொழிவு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், "மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD - க்கள் இதுவரை விற்றுள்ளன. 'ஹிந்து' வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

    இத்தாலியில்

    இத்தாலியில்

    ஒரு நாள் என்னிடம், தான் இதை இத்தாலி-யில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாகக் கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று என்னினேன். சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலி யில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்.

    வரவு செலவு கணக்கு

    வரவு செலவு கணக்கு

    வாழ்க்கையின் முடிவில் தான் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். நான் 75 சதவீத வாழ்கை வாழ்ந்துவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது வரவு செலவு கணக்குப் பார்க்கலாம் என்று என்னுகிறேன்.

    ப்ளாஷ்பேக்

    ப்ளாஷ்பேக்

    கோயம்புத்தூரில் ஒரு சிறிய கிராமத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது, கழிப்பிடம் கிடையாது, பள்ளிகூடம் கிடையாது, சாலைகள் கிடையாது. கிராமத்தில் மொத்தத்தில் 200 பேர் தா. நான் தான் கிராமத்தில் முதலில் SSLC முடித்தவன். நான் ஒரு ஓவியனாக மெட்ராஸ் வந்தேன். சண்டிகர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு 7 வருடங்கள் நிறைய பயணங்களை மேற்கொண்டேன். மகாபலிபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தங்குவதற்கு அறைகள் கிடையாது. எந்தொவொரு வசதிகளும் கிடையாது. தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்வோம். அனைத்து இடங்களுக்கும் மிதிவண்டியைத்தான் உபயோகிப்போம். திருப்பதியில் 35 ரூபாயை வைத்து கொண்டு 7 நாட்கள் தங்கி சில ஓவியங்களை வரைந்தேன்.

    துரதிருஷ்டம்

    துரதிருஷ்டம்

    என்னுடைய சிறுவயது முதல் நுற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளேன். உருவப்படம், இயற்கைநிலக்காட்சி ஆகிய இரண்டையும் மிக சிறப்பாக வரைவேன். ஆனால் நான் மிக தாமதமாக பிறந்துள்ளதாகவும் 400 வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் உங்களை கொண்டாடிருப்பார்கள். ஆனால் துருதஷ்டவசமாக இது நவீன கலையின் காலம் இதற்கு நான் சரியாக இருக்கமுடியாது என்று பலர் கூறிவிட்டனர்.

    சினிமா முயற்சி

    சினிமா முயற்சி

    என்ன செய்வது அடுத்ததாக திரைப்பட துறையில் சேர்ந்தேன். எனக்கு திரைப்படத் துறை முற்றிலும் புதியது. அப்போது சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்றவர்கள் உச்சநட்சத்திரமாக இருந்த காலகட்டம். நாடகங்கள் போடவேண்டும் என்று கூறினார்கள். இந்திய முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களையும், பரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டோம்.

    கம்பர்

    கம்பர்

    ராமாயணம், மகாபாரதம் இந்தியாவின் அடையாளம். அதிலும் கம்பர் போன்று யாராலும் எழுதவே முடியாது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். 10,122 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டத்துக்கு மட்டும் 1434 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டம் நூலினை அனைவரது வீட்டிலும் காணலாம். அதில் நான் 5 பகுதியை எடுத்துரைத்துள்ளேன்.

    எல்லாம் கடவுள் செயல்

    எல்லாம் கடவுள் செயல்

    இந்த நிலைமைக்கு கடவுள்தான் காரணம். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கடவுள் என்னை நடிகனாக மாற்றி, கல்யாணம் செய்ய வாய்ப்பு கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொடுத்து இந்த புத்தகங்களுக்கு ஒரு பத்து லட்சம் செலவு பண்ணியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதே போல 75 - வது ஆண்டை அடைந்ததற்கு என்னுடைய மகன்கள் அந்த நிகழ்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் செலவு செய்தார்கள். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. இதுபோல என்னை நல்ல நிலையில் வைத்துள்ள கடவுளுக்கு நன்றி," என்றார்.

    English summary
    Actopr Sivakumar's interview on his effort to translate Ramayanam in to Italy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X