என் மகன்னு யார்கிட்டயும் சொல்லிடாத.. சிவகுமாரின் பேச்சால் நண்பர்களின் ஏளனத்துக்கு ஆளான சூர்யா!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது அறிமுக சினிமாவில், அன்றைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வந்து கொண்டு இருந்த கதாநாயகியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. ஆனால் சூர்யாவிற்கான அறிமுகம் உண்மையிலேயே இதுதானா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சிவக்குமாரின் முதல் மகன் சூர்யா. இவர் சினிமாவிற்காக தனது பெயரை சரவணன் என்பதில் இருந்து சூர்யா என மாற்றி வைத்துக் கொண்டார். இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இன்றைய பல முன்னணி நடிகர்கள் சந்தித்த அவமானங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.குறிப்பாக உருவக்கேலிகளுக்கு ஆளானார்.

Suriya Sivakumar Kanguva Suriya 44

ஆனால் இன்றைக்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் எனக் கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகச் சிறிய சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சூர்யா எடுத்துக் கொள்ளும் மெனக்கெடல்கள் அவருடன் பணியாற்றிய பல இயக்குநர்கள் பாராட்டியுள்ளனர். உதாரணமாக நந்தா, பிதாமகன், பேரழகன், மாயாவி, ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று, ‌ ஜெய் பீம் போன்ற பல படங்களை குறிப்பிடலாம். இப்படி தனது நடிப்பால் பெரும் பாராட்டுகளை குறித்து வந்தது மட்டுமல்லாமல் விருதுகளையும் பெற்று வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை: சூர்யா தனது இளமைக்காலத்தில் எடுத்தவுடன் சினிமாவுக்கு வரவில்லை. தொடக்கத்தில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள கார்மெண்ட்ஸில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தார். கார்மெண்ட்ஸில் சூர்யா வேலைக்கு போகும் போது அவரது அப்பாவும் நடிகருமான சிவகுமார் "உன்னை யாரிடமும் எந்த இடத்திலும் எனது மகன் என கூறிக்கொள்ள கூடாது" என சொல்லி வேலைக்கு அனுப்பி உள்ளார். இதனால் சூர்யாவும் தான் நடிகர் சிவகுமாரின் மகன் என்பதை சொல்லாமல் மூன்று ஆண்டுகள் அம்பத்தூரில் உள்ள கார்மெண்ட்ஸில் வேலை செய்துள்ளார்.

Suriya Sivakumar Kanguva Suriya 44

முதல் பட வாய்ப்பு: அதன் பின்னர் அவருக்கு நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, வேலை செய்யும் நண்பர்களிடம் நான் வேலையை விடப் போகிறேன். வேலையை விட்டு விட்டு சினிமாவில் நடிக்கப் போகிறேன். அதுவும் கதாநாயகனாக நடிக்கப் போகிறேன். எனக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் சிம்ரன் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் சூர்யாவை பார்த்து உனக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிருச்சா? எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? நீ எப்படி சினிமாவுல நடிக்க முடியும்? உனக்கு சினிமாவில யாரைத் தெரியும்? அதுவும் நீ எப்படி கதாநாயகனாக நடிக்க முடியும்? என்பது போன்ற பல கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கியுள்ளனர்.

Suriya Sivakumar Kanguva Suriya 44

நண்பர்களின் ஏளன கேள்வி: நண்பர்களின் ஏளன கேள்விகளை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நடிகர் சூர்யா அதாவது சரவணன், நடிகர் சிவகுமார் தான் எனது அப்பா அவரது மூத்த மகன் நான்தான் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட சூர்யாவின் நண்பர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்த தகவலை மறைந்த நடிகர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் சிவகுமார் சூர்யாவிடம் அவ்வாறு கூறுவதற்கு முக்கிய காரணம் சிவகுமாரின் மகன் எனத் தெரிந்தால் வேலை செய்யும் இடத்தில் சூர்யாவுக்கு சிறப்பு கவனிப்புகள் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் தொழிலை சரியாக கற்றுக்கொள்ள மாட்டார், வேலை மீது அக்கறை இருக்காது என்ற எண்ணத்தில்தான், நான் உனது அப்பா என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என சிவகுமார் கூறியிருக்கக்கூடும் என பலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X