உன்னால எப்பவும் பிரச்சனை.. குடும்பத்தின் மானமே போச்சு.. ஞானவேல் ராஜாவை விளாசிய சிவக்குமார்!
சென்னை: சோஷியல் மீடியாவில் அமீர் ஞானவேல் ராஜா பிரச்சனை பேசு பொருளாகி இருக்கும் நிலையில், நடிகர் சிவக்குமார் ஞானவேல் ராஜாவை கடுமையாக விளாசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படத்தை இயக்கிய போது அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது சினிமாவில் பெரும் புயலை கிளப்பியது.
ஞானவேல் ராஜாவின் மோசமான பேச்சுக்கு இயக்குநர் மற்றும் நடிகராக திகழும் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

பொதுவெளியில் மன்னிப்பு: இந்த பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்ததால், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை கண்டித்த சசிக்குமார், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்தி விட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? என கேள்வி எழுப்பி இருந்தார். சமுத்திரக்கனியும் ஞானவேல் ராஜா பகிரங்கமாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குடும்ப மானமே போச்சு: இந்நிலையில்,சிவக்குமார் ஞானவேல் ராஜாவை கடுமையாக திட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமூகமாக முடிக்க வேண்டிய பிரச்சனையை வாய் கொடுத்து இவ்வளவு பெரிய பிரச்சனையாகிவிட்டது, உன்னால், இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த மானமே போச்சு என்றும், இந்த பிரச்சனை முடிய வேண்டும் என்றால் அமீரிடம் மன்னிப்பு கேட்டுவிடு என்று சிவக்குமார் கூறியுள்ளார்.

உச்சகட்ட கோபம்: ஞானவேல் ராஜாவோ சிவக்குமார் சொல்லுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல், தனக்கு தோன்றியதை செய்து வருகிறார். இதனால், ஞானவேல் ராஜா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் சிவக்குமார் என்னால் தான் சினிமாவிற்கு வந்தாய், அப்படி இருக்கும் பொழுது என் பேச்சையே மதிக்க மாட்டீயா என்று கடுமையாக திட்டி வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரு செய்தி அடிபடுகிறது. அது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications