நான் பணமில்லாமல் படி‌க்க கஷ்டப்பட்டேன்.. சிவகுமார் உருக்கமான பேச்சு!

சென்னை : நான் சிறுவயதில் படிக்க பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன் என்று அகரம் விழாவில் சிவகுமார் உருக்கமாக பேசினார்.

சிவகுமார் மாபெரும் நடிகர் பல தென்னிந்திய மொழிகளில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டார். இவரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நடித்து வருகின்றனர் அதே நேரத்தில் இவர்கள் பல மாணவர்களை படிக்க வைக்கும் அகரம் என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகின்றனர்.

 Actor sivakumar speech

சமீபத்தில் அகரம் சார்பில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் பேசிய சிவகுமார். தான் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை கடந்து, பலருக்கும் உதவி, தற்போதும் தன் மகன்கள் மூலம் உதவி வருகிறேன் எனும் என்று கூறினார்.

மேலும் பேசிய சிவகுமார், தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததவன், என் குடும்பத்தில் மொத்தம் 5 பிள்ளைகள், அ‌தி‌ல் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே மூன்று குழந்தைகளும் நோயால் இறந்து விட்டனர். அதே போல என் அப்பாவும் சிறுபிள்ளையாக இருக்கும் போது இறந்துவிட்டதாக கூறி வருந்தினார் .

 Actor sivakumar speech

என் அம்மா மிகுந்த ஏழ்மைக்கு இடையில் தான் என்னை வளர்த்தார். பள்ளிச்செலவை பார்க்க முடியாமல் என் அக்காவை பள்ளியில் இருந்து நிறுத்தி என்னை மட்டுமே படிக்க வைத்தார்கள். அப்போதோ எங்கள் குடும்பம் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கும் ஆனால் எனது தாய் தான் மிகுந்த கடினத்திற்கு இடையே எங்களை வளர்த்தார் என உருக்கத்துடன் கூறினார்.

மேலும் பள்ளி படிப்பை மிக கடினத்துடன் படித்து முடித்ததாக கூறிய சிவகுமார். அதற்கிடையில் வந்த பல செலவுகளை பல கஷ்டங்களுக்கு இடையே கட்டியாதவும் கூறினார். மேலும் பள்ளி படிப்பை முடித்து பல வருடங்கள் கழித்து தன்னுடன் படித்தவர்களை ஒன்று திரட்டி அந்த பள்ளிக்கு நிதி திரட்டி அந்த பள்ளியை சீரமைத்தோம் என்றார். அதற்கு பிறகு அந்த பள்ளியை தானே தத்தும் எடுத்து கொண்டாதாவும் சிவகுமார் கூறினார்.

 Actor sivakumar speech

மேலும் சிவகுமார் அறக்கட்டளை என ஆரம்பித்து பலரின் கல்விக்காக உதவினேன், என் சம்பளம் ஆயிரம் ரூபாய் இருக்கும் போதே அறக்கட்டளையில் நன்கு படித்து முதலிடம் வரும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறேன். கடைசியாக 2006ல் சிவகுமார் அறக்கட்டளையின் பொருப்பை சூர்யா மற்றும் கார்த்தியிடம் கொடுத்து விட்டேன் எ‌ன்றா‌ர்.

அது தான் தற்போது அகரமாக வளர்ந்து நிற்கிறது பலரையும் படிக்க வைத்து இருக்கிறது என்றும் பெருமிதம் கொண்டார். அகரம் தமிழ்நாட்டில் செயல்பட்டு பல ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளது. இதில் படித்த பல மாணவர்கள் தங்களின் வாழ்கை தரத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அகரம் விழாவில் சிவகுமார் தனது வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X