SJ Surya :ஒரு படத்துக்காக எஸ்ஜே சூர்யா இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குநராகத்தான் தன்னுடைய திரையுலகப்பயணத்தை துவக்கினார். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஒரு கட்டத்தில் தன்னுடைய இயக்குநர் அவதாரத்தை நிறுத்திக் கொண்டு, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
ஒரு படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கும் எஸ்ஜே சூர்யா : இயக்குநராகத்தான் தன்னுடைய திரையுலகப்பயணத்தை துவக்கினார் எஸ்ஜே சூர்யா. விஜய், அஜித் படங்களை இயக்கி மிகப்பெரிய ஹிட்டாக்கினார். தொடர்ந்து, தன்னுடைய இயக்கத்தில் தானே நடித்தும் படங்களை ரிலீஸ் செய்து, அந்தப் படங்களையும் வெற்றிப்படங்களாக்கினார். இதையடுத்து ஒரு கட்டத்தில் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தினார். பல வெற்றிப் படங்களில் தன்னை கமிட் செய்துக் கொண்டார்.
விஜய்யை வைத்து மாஸ் ஹிட் கொடுத்த எஸ்ஜே சூர்யா, ஒரு கட்டத்தில் அவருக்கு வில்லனாக மெர்சல் படத்தில் மாஸ் காட்டினார். தொடர்ந்து சிம்பு -வெங்கட் பிரபு கூட்டணியில் டைம் லூப் பாணியில் வெளியான மாநாடு படத்திலும் களமிறங்கினார். முன்னதாக இறைவி உள்ளிட்ட படங்களிலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தொடர்ந்து ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஓடிடியிலும் வதந்தி வெப் தொடரில் கமிட்டாகி நடித்திருந்தார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் சஞ்சனா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்ரம் வேதா பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி இந்த தொடரை தயாரித்திருந்தனர். ஒரு பெண்ணின் கொலை வழக்கை கண்டுபிடிக்க நியமிக்கப்படும் சிறப்பு அதிகாரியாக இந்த கதையில் எஸ்ஜே சூர்யா நடித்திருப்பார்.
விஜய்யின் வாரிசு படத்திலும் இவர் நடித்திருந்த கேமியோ ரோல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ஷங்கர் -ராம்சரண் கூட்டணியில் உருவாகிவரும் படத்திலும் இவர் வில்லனாக நடித்து வருகிறார். அவர் மீண்டும் கில்லர் படத்தின்மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முடிவில் உள்ளார். இதற்கான கதை, திரைக்கதை உள்ளிட்ட வேலைகளையும் அவர் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அவர் பிஎம்டபள்யூ கார் ஒன்றையும் வாங்கியுள்ள நிலையில், விரைவில் கில்லர் படத்தின் சூட்டிங்கை அவர் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ராம்சரண் படத்தில் அவர் பிசியாக உள்ளதால், கில்லர் படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 6 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











