SJ Surya: ஆறு ஆண்டுகளாக தயாரித்த ஸ்கிரிப்ட்.. விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்ஜே சூர்யா!
சென்னை: வாலி, குஷி என கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் உள்ளிட்டோரை வைத்து படங்களை இயக்கி பிரபல இயக்குநராக பேசப்பட்டவர் எஸ்ஜே சூர்யா. ஒரு கட்டத்தில் தானே ஹீரோவாக நடித்து அடுத்தடுத்த படங்களை கொடுத்த எஸ்ஜே சூர்யா, மான்ஸ்டர், இறைவி உள்ளிட்ட படங்கள் மூலம் முழுநேர நடிகராக மாறியுள்ளார். வில்லன், கேரக்டர் ரோல், ஹீரோ என தற்போது அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார். கோலிவுட்டில் அதிகமான படங்களை வைத்துள்ளவர் என்ற நிலையும் தற்போது எஸ்ஜே சூர்யாவிற்கு கிடைத்துள்ளது. மாதத்திற்கு ஒரு படமாவது இவரது நடிப்பில் வெளியாகி வருகிறது.
விஜய், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களிலும் எஸ்ஜே சூர்யாவை பார்க்க முடிகிறது. தன்னுடைய இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பால் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பாக உயிர் கொடுத்து வருகிறார். நடிகராக எஸ்ஜே சூர்யா மாஸ் காட்டி வந்தாலும் இவருக்குள் இருக்கும் இயக்குநரை ரசிகர்கள் மிஸ் செய்து வருகின்றனர். அவர் தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் அடுத்ததாக படமியக்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் எஸ்ஜே சூர்யா: நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குநராக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார். விஜய், அஜித் நடிப்பில் வெளியான குஷி, வாலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் எஸ்ஜே சூர்யா. இந்தப் படங்கள் விஜய், அஜித் கேரியரின் பெஸ்ட் படங்களாக அமைந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பு மற்றும் இயக்கத்தில் படங்களை கொடுத்து வந்தார். இந்தப் படங்களும் சிறப்பாகவே அமைந்தன. ஆனாலும் நடிப்பில் இருக்கும் ஆர்வம் காரணமாக மற்ற இயக்குநர்கள் டைரக்ஷனிலும் இணைந்து நடிக்கத் துவங்கினார். தற்போது இயக்கத்தை விட்டுவிட்டு முழுநேர நடிகராகவே மாறியுள்ளார்.
பிசியான நடிகர்: முன்னணி இயக்குநர்கள் மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களிலும் தொடர்ந்து தன்னை இணைத்துக் கொண்டு வருகிறார் எஸ்ஜே சூர்யா. மான்ஸ்டர், இறைவி என மாஸ் ஹிட் படங்களின்மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிசி நடிகராக மாறியுள்ளார் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளன. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
விரைவில் இயக்கம்: இதனிடையே எஸ்ஜே சூர்யா நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கில்லர் என்ற படம் உருவாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. அடுத்தடுத்து நடிகராக அவரது கமிட்மெண்ட்களால் இந்தப் படம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்தப் படத்தில் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து கார் வாங்கி, அதை பல மாதங்களாக பராமரித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை அவர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளதாகவும் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பை அவர் மேற்கொள்வார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பாளர் எஸ்ஜே சூர்யா: அதிகமான படங்களில் நடித்துவரும் எஸ்ஜே சூர்யா, இந்தப் படங்களின் இடையில் கிடைக்கும் இடைவெளிகளை பயன்படுத்தி தன்னுடைய தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ள கில்லர் படத்தின் சூட்டிங்கை திட்டமிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெற்றிக் கூட்டணிகளில் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் எஸ்ஜே சூர்யா, நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குநராகவுள்ள நிலையில் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்ஜே சூர்யா இயக்கத்திற்கும் தனிப்பட்ட ரசிகர்கள் காணப்படும் நிலையில், இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











