SJ Surya :D50 குறித்து அப்டேட் சொன்ன எஸ்ஜே சூர்யா.. தனுஷ் குறித்து என்ன சொன்னாரு தெரியுமா!

சென்னை : நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் கேப்டன் மில்லர் படத்தன் சூட்டிங் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இணைந்துள்ள இந்தப் படத்திற்காக நீண்ட தாடி, மீசை, தலைமுடி என அவர் அதிரடி மாற்றத்தை செய்துள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படம் உருவாகவுள்ளது.

Actor SJ Surya going to join Dhanushs D50 movie

தனுஷ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய எஸ்ஜே சூர்யா :நடிகர் தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கோலிவுட்டில் துவங்கிய இவரது பயணம், பாலிவுட், ஹாலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும் சிறப்பான வெற்றிகளை கொடுத்து வருகிறது. பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்படும் தனுஷ், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிப்பதற்கே அவருக்கு நேரம் கிடைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இயக்கத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அதிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை ராக்கி, சாணிக்காயிதம் போன்ற அதிரடி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார். படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் இருந்து தனுஷ் வெளியிட்ட வீடியோக்களும் வைரலான நிலையில், விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ளது டி50. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் தனுஷ் தம்பியாக நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தனுஷ் இயக்கத்தில் ப பாண்டி என்ற படம் வெளியானது. வயதான காலத்தில் தேவைப்படும் அன்பும் தன்னுடைய இளமைக்கால காதலைத் தேடிப் போகும் வயதானவரின் கதையை இந்தப் படம் சிறப்பாக வெளிப்படுத்தியது. படத்தில் தனுஷ், மடோனா செபாஸ்டியன், ரேவதி, டிடி போன்றவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தில் ராஜ்கிரண், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இடையில் நான் ருத்ரன் என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்த தனுஷ், அதை கைவிட்டார். இதனிடையே, தற்போது டி50 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் இணைந்துள்ள எஸ்ஜே சூர்யா, தான் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதை தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நான் ருத்ரன் படத்திலும் தனுஷ் இயக்கத்தில் நடிக்க தான் கமிட்டாகியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனுஷிற்கு இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும்போது அவர் ஒவ்வொரு ஷாட்டையும் மிகவும் அழகாக திட்டமிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எஸ்ஜே சூர்யா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இன்னும் இரு தினங்களில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பொம்மை என்ற படம் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X