Top 5 நடிகர்கள் லிஸ்ட்.. ஸ்ட்ராங்காக உட்கார்ந்த சிவகார்த்திகேயன்.. யாரு பாராட்டியிருக்காங்க பாருங்க!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது டான் படம்.

இந்தப் படம் அப்பா -சென்டிமெண்ட்டை மையமாக வைத்து வெளியானது.

இந்நிலையில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. வசூல்மழையும் பொழிந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான டான் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படம் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சிறப்பான சென்டிமெண்ட், காமெடி என சிவகார்த்திகேயன் படங்களுக்கே உரிய அம்சங்களுடன் வெளியானது.

டாக்டர் படம்

டாக்டர் படம்

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படமும் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் தற்போது டான் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதன்மூலம் கோலிவுட்டில் முக்கியமான நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிறப்பான டான் படம்

சிறப்பான டான் படம்

இந்தப் படத்தில் காமெடி, ஆக்ஷன், அப்பா -மகன் சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவு ஆகியவை சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுக படமாக இருந்தாலும் இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தன்னை சிறப்பான இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

சிறப்பான மெசேஜ்

சிறப்பான மெசேஜ்

படத்தில் வாழும்போதே பெற்றோரை கொண்டாடுங்கள் என்ற சிறப்பான மெசேஜூம் படத்தின் கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்தது. இந்தப் படத்தை பார்த்தபோது தான் அழுதுவிட்டதாக பல பிரபலங்களும் தங்களுடைய சோசியல் மீடியாவில் தெரிவித்தனர். இதுவும் படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுத்தது.

டாப் 5 நடிகர் சிவகார்த்திகேயன்

டாப் 5 நடிகர் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் குறித்து பேசிய எஸ்ஜே சூர்யா, இந்தப் படத்தின்மூலம் தற்போது டாப் 5 நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் மாறியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் 3 இடங்களில் நிரந்தரமாக நடிகர்கள் உள்ள நிலையில், 4வது மற்றும் 5வது இடங்களில் நடிகர்கள் மாறிமாறி வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

ஆனால் கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் நிரந்தரமாக தற்போது சிவகார்த்திகேயன் இடம்பிடித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதனிடையே இந்தப் படத்தில் தான் நடிப்பது ஒரு நேரத்தில் கேள்விக்குறியானதாகவும் ஆனால் தன்னை படத்தில் நடிக்க அழைத்துக் கொண்டதாகவும் எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Surya | Madhavan-னை பார்த்து திகைத்து போன Suriya | Rocketary *TamilNadu | Oneindia Tamil
பேராசிரியராக எஸ்ஜே சூர்யா

பேராசிரியராக எஸ்ஜே சூர்யா

டான் படத்தில் கல்லூரி பேராசிரியராக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். மாநாடு படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் வெளியான இந்தப் படத்திலும் அவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பிரச்சினை கொடுக்கும் அவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய பாசிட்டிவ் பக்கத்தை வெளிப்படுத்தும் இடத்தில் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி விடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X