SJ Surya : காதலில் எஸ்ஜே சூர்யா.. திருமணம் குறித்த கேள்விக்கு பதில்!
சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா வாலி, குஷி என முன்னணி நடிகர்கள் அஜித், விஜய்யை வைத்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னுடைய இயக்கத்தில் உருவாகிய படங்களில் அவரே ஹீரோவாக நடித்து அந்தப் படங்களையும் வெற்றிப் படங்களாக்கினார்.
தற்போது நடிகராக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விஜய், கமல்ஹாசன் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து இவர் தற்போது நடித்து முடித்துள்ளார்.

காதலில் விழுந்த நடிகர் எஸ்ஜே சூர்யா : நடிகரும் பிரபல இயக்குநருமான எஸ்ஜே சூர்யா, அனைவருக்கும் பேவரிட். இவரது இயக்கத்தில் துவக்கத்தில் குஷி, வாலி போன்ற படங்கள் விஜய், அஜித் நடிக்க வெளியானது. இந்தப் படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை இவர் கவர்ந்தார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார். அந்தவகையில், வியாபாரி, நியூ, இசை போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சாதித்தன.
தொடர்ந்து ஒரு கட்டத்தில் இயக்கத்தை கைவிட்டு, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், மாநாடு, மெர்சல், டான் போன்ற படங்களில் வில்லனாகவும் மான்ஸ்டர் போன்ற படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். அனைத்து கேரக்டர்களிலும் இவர் சிறப்பாக பொருந்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் மெயின் வில்லனாக இவர் நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விஜய்யின் வாரிசு படத்திலும் இவர் கேமியோ ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். கம்பீரமாக வந்து தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பை சேர்ந்திருந்தார் எஸ்ஜே சூர்யா.

54 வயதாகும் எஸ்ஜே சூர்யா இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து சக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. அனைவருக்கும் மழுப்பலான பதிலையே கொடுத்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள எஸ்ஜே சூர்யா, தனக்கு சினிமாதான் முக்கியம் என்றும் சினிமாவை தான் காதலிப்பதாகவும் பதில் அளித்துள்ளார்.
படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வதந்தி வெப் தொடர் மிகப்பெரிய பாராட்டுக்களை இவருக்கு பெற்றுத் தந்தது. இவர் ஷங்கர் இயக்கத்தில் கமலுக்கு மட்டுமில்லாமல் ராம்சரணுக்கும் வில்லனாகியுள்ளார். ஒரு படத்தில் நடிக்க இவர் 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே விரைவில் கில்லர் என்ற படத்தை இவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











